கல்முனை வலய பாடசாலைகளுக்கு புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள்கள் விநியோகம்.



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலயத்திலிருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் சாதனையாளர்களை உருவாக்கும் நோக்கில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக Edu Free Academy யினால் தரம் 05 யில் கல்வி பயிலும் இவ்வாண்டு (2022) புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச வினாத்தாள்கள் கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவரும், Edu Free Academyயின் கல்முனை பிரதேச இணைப்பாளருமான எம்.என்.எம்.அப்ராஸினால் பாடசாலைகளுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது

Edu Free Academy பணிப்பாளர்களான ஐ.எம்.றொஸான் மற்றும் பாத்திமா ஸஹ்ரா நிஸ்பர் ஆகியோரின் வழிகாட்டுதலில், கல்முனை கல்வி வலயத்தில் ஆரம்பகட்டமாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு கல்விக்கோட்ட பாடசாலைகளுக்கு இந்த வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முதல்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை கிரீன் பீல்ட் கமு/கமு/ ரோயல் வித்தியாலயம், சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம். எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயம், மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலயம் போன்ற பாடசாலை அதிபர்களிடம் இந்த மாதிரி புலமைப்பரிசில் வினாத்தாள்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டதுடன் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதிரி முன்னோடி பரீட்சையும் நடாத்தி வைக்கப்பட்டது.

இனிவரும் காலங்களிலும் தொடர்ந்தும் இந்த சேவையை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஏனைய பாடசாலைகளுக்கும் Edu Free Academyயின் இந்த இலவசமாக மாதிரி புலமை பரீட்சை வினாத்தாதாள்கள் விநியோகம் செய்யவுள்ளதாகவும் இணைப்பாளர் எம்.என்.எம்.அப்ராஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :