இன்று போதைப்பொருள் பாவனை தலைவிரித்து ஆடுவதற்கு காரணம் இளமையில் அறநெறிக் கல்வி சீரின்மையே! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் கூறுகிறார்.



வி.ரி. சகாதேவராஜா-
ன்று போதைப்பொருள் பாவனை பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல மாணவர் மத்தியிலும் தலை விரித்து ஆடுகின்றது. இதற்கு அடிப்படை காரணம் சிறுவயதில் அறநெறி கல்வி சீராக வழங்கப்படாததே..

இவ்வாறு முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதித் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை அஹதிய்யா பாடசாலைகளின் கூட்டிணையமும், நூறுஸ்ஸலாம் அஹதிய்யா பாடசாலையும் இணைந்து நடத்திய சேவை நலன் கௌரவிப்பு விழாவும் ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கல் நிகழ்வும் நேற்று நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கூட்டிணையத்தின் தலைவரும் ஆசிரிய ஆலோசகருமான இசட்.எம். றிஸ்வி தலைமையில் சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா கட்டிடத்தில் நேற்று (29) சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

அங்கு கல்வி சமூக சேவையாற்றிய எண்மர் கௌரவிக்கப்பட்டார்கள்.

இஸ்லாமிய கலாசார அமைச்சின் முன்னாள் செயலாளர் அஷ்ஷேய்க் எம்.ஐ. அமீர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம் எஸ் சஹதுல் நஜீம் ,சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் எஸ் எம் எம் அமீர் ,கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சபூர் தம்பி, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் அஷ்ஷேய்க் ஏ.சுபைதீன் ,முன்னாள் அதிபர் முத்து இஸ்மாயில், முன்னாள்ஆசிரியை நபீரா எ கதிர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி பாராட்டப்பட்டார்கள்.

அங்கு விஷேடமாக சர்வமத சிறப்பு உரையை அம்பாறை மாவட்ட சர்வ சமய சம்மேளன செயலாளரும் உதவி கல்வி பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார் .

அங்கே பிரதம அதிதி மன்சூர் தொடர்ந்து உரையாற்றியபோது..

அறநெறி கல்வி என்பது சிறுவயதிலிருந்தே ஊட்டப்பட வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே சிறப்பானதாகும். அறநெறி ஆசிரியர்களுக்கான உதவியை நாங்கள் அனைவரும் சேர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற பொழுது அது கிடைக்கூம். சம்மாந்துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஒரு குடையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விழாவில் பல மார்க்க அறிஞர்கள் உரையாற்றினார்கள்.
சம்மாந்துறை அஹதியா பாடசாலை கூட்டமைப்பின் செயலாளர் யூ.எல்.றைசூன் நன்றியுரையாற்றினார்.

நிகழ்வில் அறநெறி ஆசிரியர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. மேலும் அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வில் ஊரின் முக்கிய மத பிரமுகர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :