கல்முனை மாநகர சபை எல்லையினுள் நடமாடும் கட்டாக்காலி ஆடு, மாடுகள் கைப்பற்றப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை மாநகர சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்முனை மாநகர பிரதேசங்களில் குறிப்பாக பிரதான வீதிகள், சந்தைகள், பஸார்களில் கட்டாக்காலிகளின் தொல்லைகள் மீண்டும் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் வாகன விபத்துகள் இடம்பெறுவதுடன் பயணிகளும் வர்த்தகர்களும் நுகர்வோரும் பெரும் இடையூறுகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
அவ்வாறே மைதானங்கள், கடற்கரை, சிறுவர் பூங்காக்கள், பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் கட்டாக்காலிகளின் நடமாட்டங்களினால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதுடன் குறித்த இடங்கள் மாசுபடுத்தப்பட்டும் வருகின்றன.
இவை தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளைத் தொடர்ந்து மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 48 இன் கீழ் கல்முனை மாநகர சபையினால் மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பதுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இதனை நடைமுறைப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் இன்று அவசர பணிப்புரை விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment