மோட்டார் சைக்கிள் - படி ரக வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பிரதான வீதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் நேற்றிரவு (5) 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பகுதியிலுள்ள மகளின் வீட்டுக்கு சென்று விட்டு பாலைநகரிலுள்ள தனது வீட்டுக்கு கணவன் - மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிந்த போது, பின்னால் வந்த படி ரக வாகனம் மோதியதில் மனைவி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
இவ் விபத்தில் உயிரிழந்தவர் பாலை நகர் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய உசனார் ஆமினா உம்மா என்பவர் என தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தில் படுகாயமடைந்த கணவர் ஆதம் பாவா உசனார் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் படி ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment