மனித சமூகத்தின் ஆளுமை விருத்திக்கு புத்தக வாசிப்பு மிக மிக அவசியமாகும், அந்த வகையில் அறிவார்ந்த சமூகத்திக்கான வாசிப்பு எனும் தொனிப் பொருளில் வாசிப்பு மாதத்தினை சிறப்பிக்கும் முகமாக கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/அல்-ஹுசைன் வித்தியாலத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சிகள் பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலய உதவிக்கல்வி பணிப்பாளரும், தென்கிழக்குப் பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரையாளருமான கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் கலந்து கொண்டார். இதன்போது சமூகத்திக்கான வாசிப்பு என்ற தலைப்பில் காத்திரமான உரையினை நிகழ்த்தினார். நிகழ்வில் பேசப்பட்ட விடயம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடை கூறிய மாணவர்களுக்கு இந்நிகழ்வில் வைத்து பரிசில்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வின் தொடர்ச்சியாக நூலக மண்டபத்தில் இடம்பெற்ற புத்தக கண்காட்சியையும் அதிதிகள் ஆரம்பித்து வைத்தனர். இந்நிகழ்வில் மேலும் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment