சம்மாந்துறை ஆயுர்வேத பாதுகாப்பு சபையால் விழிப்பூட்டல் நிகழ்வுகள் !



நூருல் ஹுதா உமர்-
யற்கையோடு ஒன்றித்த வாழ்வை முன்னெடுப்பதற்கும், மருத்துவ மூலிகைகளை அறிவதற்கும் பொதுமக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு விழிப்பூட்டுகின்ற வேலை திட்டம் சம்மாந்துறை ஆயுர்வேத பாதுகாப்பு சபையால் பற்றுறுதியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அமைய சம்மாந்துறை கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையில் போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் மாத்திரம் அன்றி போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர் என்று சபையின் பொது செயலாளர் வைத்திய கலாநிதி எம். சி. எம். காலித் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். எம். ஹனிபா ஆகியோர் பேராளர்களாக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர். போட்டியில் முதலாம் இடத்தை சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி எப். ஹயானா ஹிமாவும், இரண்டாம் இடத்தை சம்மாந்துறை ம்ஜித்புர வித்தியாலய மாணவி ஐ. எல். நப்காவும், மூன்றாம் இடத்தை சம்மாந்துறை அஸ்ஸமா வித்தியாலய மாணவி ஏ. எப். சுஹாவும் பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :