அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு எனும் தொனிப் பொருளில் வாசிப்பு மாதத்தை சிறப்பிக்கும் வகையில் மளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சிகள் அதிபர் அஸ்மி அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும், தென்கிழக்கு பல்கலைக்கழக பகுதி நேர விரிவுரையாளருமான கலாநிதி சத்தார் எம் ஃபிர்தவ்ஸ் கலந்து கொண்டார். மேலும் பாடசாலை உதவி அதிபர், ஆசிரியர்கள்,கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் அதிதிகளால் இந்நிகழ்வில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டது
0 comments :
Post a Comment