மாவீரர்களின் ஆத்மா சாந்தியடைவதற்கான காலம் இன்று கனிந்திருக்கின்றது: இன்று தீர்வைப் பெறாவிட்டால் ஒரு காலமும் பெறமுடியாமல் போகலாம்!



மாவீரர் நிகழ்வில் காரைதீவு தவிசாளர் ஜெயசிறில்.
வி.ரி.சகாதேவராஜா-
தாயக மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களின் ஆத்மா சாந்தியடையும் காலம் கனிந்திருக்கின்றது. இதனை சகல தமிழ்ப்பிரதிநிதிகளும் மனதில் வைத்து ஒன்றுபட்டு, ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அந்த தீர்வை வென்றெடுக்க முன்வரவேண்டும் .
இவ்வாறு ஜனநாயக போராளிகள் கட்சியின் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார் .

ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் வெல்லாவெளியிலுள்ள மட்டு.அம்பாறை தலைமையகத்தில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (24)வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றவர்கள் சேர்ந்து கதறியழுத வண்ணம் ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆக வணக்கத்தை மேற்கொண்டார்கள்.

அங்கு பிரதமஅதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து சிறப்பித்தார் .சிறப்பு அதிதியாக போரதீவுப் பற்று பிரதேச சபை உறுப்பினர் தம்பி பிள்ளை தியாகராஜா கலந்து கொண்டார்.

அங்கு ஜெயசிறில்மேலும் உரையாற்றுகையில்...

ஒட்டுமொத்த தமிழினத்திற்காக இன்னுயிர்களை ஆகுதி செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு கடந்த காலங்களில் பல தடைகள் விதிக்கப்பட்டன.
இன்று ஓரளவுக்கு அது தணிந்திருக்கின்றது.
நாட்டிலே தமிழர்களை அடக்க வேண்டும், ஒடுக்க வேண்டும், சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்று சிங்கள பேரினவாதம் புறப்பட்டபோது தான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தினார்களை தவிர ஏனைய இனங்களை வஞ்சிக்க வேண்டும், நசுக்க வேண்டும் என்ற சிந்தனை ஒருபோதும் இருந்ததில்லை .சிங்கள மக்கள் எமக்கு எதிரிகள் அல்ல .அவர்கள் நண்பர்கள் .

இன்று எமது போராட்டத்தை அவர்கள் உணரத் தொடங்கி இருக்கின்றார்கள் .நாம் ஜனநாயக ரீதியாக, சுயநிர்ணயத்துடன் கூடிய அரசியல் தீர்வு கிடைப்பதற்காக போராடினோம். இன்று அதற்கான சமிக்ஞையை தற்போதைய ஜனாதிபதி ரணில் வெளியிட்டு இருக்கின்றார் .

இதனை நாங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .
அன்று 2009இல் யுத்தத்தை வென்று விட்டோம் புலிகளை அழித்துவிட்டோம் என்று மார்தட்டிய அரசாங்கம், இன்று போதைப்பொருள் என்ற அரக்கனை ஒழிக்க முடியாமல் போனதன் காரணம் என்ன ?

அன்று வடகிழக்கில் எந்த இடத்திலும் இந்த போதைப்பொருள் பாவனை , பாலியல் துஸ்பிரயோகம் என்பன மருந்துக்கும் கிடையாது.பிரபாகரனின் நிர்வாகம் சிறந்த நிர்வாகம் என்கிறார்கள்.

இதனை நாங்கள் சொல்லவில்லை . சிங்கள மக்களே சொல்லுகின்றார்கள். சிங்கள பிரதிநிதிகள் சிங்கள ஊடகங்கள் பறைசாற்றுகின்றன. அந்த அளவுக்கு மாவீரர்களின் ஒழுக்கம் கடமை மதிக்கப்படுகின்றது.
சர்வதேசத்திலும் இது சொல்லப்படுகின்றது.

சத்தம் இல்லா யுத்தம்! ஆனால், இன்று சத்தம் இல்லாமல் ஒரு யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.அதுதான் போதைப்பொருள் பாவனை. மக்கள் மத்தியில் மட்டுமல்ல, மாணவர் மத்தியிலும் அது தலை விரித்து ஆடுகின்றது. இதனை யார் செய்கின்றார்கள் என்பதனை மக்கள் அறிவார்கள் .எனவே கவனமாக இருக்க வேண்டும் .

நாங்கள் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் ஒரு தேசிய இனம் எமக்கென்று கலாச்சாரம் எமக்கென்று ஒரு பிரதேசம் .அதனைத் தான் நாங்கள் கேட்கின்றோம். உலகிலேயே வீரமிக்க ஒரு போராட்டத்தை நடத்தியது தமிழர்களே என்ற பதிவு இன்றும் இருக்கின்றது.

எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக மாவீரர்கள் தமது உயிரை தியாகம் செய்து இருந்தார்கள்.
அவர்களது அந்த தியாகத்துக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டுமாக இருந்தால் ஜனாதிபதி கூறிய அந்த அரசியல் தீர்வை நாங்கள் பேசி பெற்றுக் கொள்ள வேண்டும். நான் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அல்ல மாவீரர்களின் பெற்றோர்கள் சார்பாக இந்த கோரிக்கையை விடுகின்றேன் .

அதாவது மாவீரர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாக இருந்தால் அந்த தீர்வை நாங்கள் பெற வேண்டும் .இன்று அந்த தீர்வை பெறாவிட்டால் ஒரு காலமும் பெற முடியாமல் போகலாம். எனவே தமிழ்
தேசிய பரப்பில் இருக்கக்கூடிய அத்தனை தமிழ் பிரிதிகளும் தங்களது சுய கௌரவம், வரட்டுக் கௌரவம், சுய கொள்கைகளை எல்லாம் விட்டுவிட்டு இந்த வடகிழக்கு மக்களுக்காக, மாவீரர்களுக்காக ஒன்றுபடுங்கள்.
கடந்தவை கடந்தவை யாக இருக்கட்டும்.
அரசுக்கு வால் பிடித்து இன்னும் இன்னும் துரோகிகளாக மாறாதீர்கள். மாவீரர்களை தேசிய வீரர்களாக போற்றி அவர்களுக்கு மரியாதை செலுத்துவோமாக.

நிகழ்வில் மாவீரர்கள் பெற்றோர்களுக்கு கௌரவிப்பு இடம்பெற்றது . மதிய உணவு வழங்கி உலர் உணவுப்பொருள் மற்றும் தென்னம் பிள்ளைகளும் வழங்கப்பட்டன.
முன்னாள் போராளிகள் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வை முன்னாள் போராளி கோபால் உணர்வு பூர்வமாக தொகுத்து வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :