அறிமுக பயிற்சி நெறியும் சான்றிதழ்கள் வழங்கி வைப்பும்



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிதாக கடமையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள சுகாதார மருத்துவ மாதுக்களுக்கான அறிமுக பயிற்சிநெறி தாய் சேய் நலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச் ரிஸ்பின் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ. அப்துல் வாஜித் ஆகியோர் பங்கு பற்றியதுடன் பயிலுனர்களுக்கு அவர்களின் கடமை தொடர்பிலும் கடமையின் முக்கியத்துவம் தொடர்பிலும் மட்டக்களப்பு தாதியர் கல்லூரிக்கு சுமார் 16 மாதங்கள் பயிற்சிக்காக அனுப்பப்படும் நோக்கத்தையும் விரிவாக தெளிவுபடுத்தியதுடன் இப்பயிற்சியின் பின்னர் சிறந்த செயற்றிறன் மிக்க சேவையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் இறுதியில் இரண்டு வார கால பயிற்சியை பெற்ற குறித்த பயிலுநர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :