இவர் தனது பாடசாலைக் கல்வியை ibn Al Hytham இஸ்லாமிய பாடசாலை பஹ்ரைனில் கற்றதோடு பல்கலைக்கழக கல்வியை இலங்கையில் ஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கற்றார். மருத்துவ துறைக்கு மேலதிகமாக விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பஹ்ரைன் நாட்டின் தேசிய கிரிக்கெட் அணியின் U-16 மற்றும் U-19 பிரிவில் விளையாடி பல சாதனைகளை நிகழ்தியதோடு ஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முஹம்மட் சலீம் மற்றும் மரியம் சலீம் ஆகியோரின் புதல்வனாக திகழ்வதோடு சர்வதேச ரீதியில் 4 ஆம் இடத்தில் திகழும் பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஒன்றில் தங்க விருதை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை பட்டமளிப்பு விழாவில் கெளரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் , பாதுகாப்பு செயலாளர், பல்கலைக்கழக வேந்தர் , பல்கலைக்கழக உப வேந்தர், முப்படை தளபதிகள், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment