சிஹான் HMSK.ஹேரத் மற்றும் சென்செய் நிரோஷன் தலைமையில் வடமேல் மாகாண, வடமத்தி மற்றும் கிழக்கு மாகாண போட்டியாளர்களை கொண்டு கடந்த சனிக்கிழமை (29.10.2022) நடைபெற்ற இப்போட்டியில் கிழக்கு மாகாண USKU கராத்தே சங்க மாணவர்கள் சிஹான் Ms.வஹாப்தீன் தலைமையில் கலந்து கொண்டு 16 தங்கப்பதக்கம் 09 வெள்ளிப்பதக்கம் 13 வெண்கலப்பக்கதத்தையும் பெற்று Senior Runner Up வெற்றிக்கிண்ணத்தையும் சுவீகரித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போட்டியானது Sub junior (6-13 years),Cadet (14-15years),Junior(16-17Years),Under 21yeras,Senior (21+ yeras) ஆகியோருக்கான காத்தா,குமித்தே,குழுக் காத்தா ஆகிய போட்டி நிகழ்சிகள் நடைபெற்றதோடு பிரதம அதிதிகளாக வெலிகந்த பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் கே.ஜி. அசேல சரத் குமார் மற்றும் கலால் வரி ஆய்வாளர். ஜே.எம். லலித் வீரசிங்க ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அத்தோடு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு USKU கராத்தே சங்கத்தின் பணிப்பாளர்/ போதானாசிரியர் சிஹான் ZA.RAUF வாழ்த்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment