ஹிஸ்புல்லாஹ்வை S.L.M C.ல் இணைக்குமாறு வேண்டுகோள்!



கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைத்துக் கொள்ளுமாறு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீமிடம் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வருகின்றது. அதே போல கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொள்ளுமாறு சிலர் வலியுறுத்துவதாகவும் அறியப்படுகின்றது.

எதிர் வரும் 2023ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஒன்று நடைபெறலாம் என்று பலராலும் எதிர்வு கூறப்படுகின்றது. இந்த நிலையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளராக போட்டியிட வைப்பதற்கான வேலைத்திட்டம் இடம் பெறுவதாகவும் கூறப்படுகின்றது.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைத்துக் கொள்ளுமாறு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீமிடம் இரண்டு தரப்புக்கள் சென்று வேண்டுகோள் விடுத்திருப்பதாக அறிய முடிகிறது.

இது தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி முக்கியஸ்தர்களிடம் கேட்ட போது அவ்வாறான ஒரு கதை அடிபடுவதாக தெரிவித்தனர்.
அவ்வாறு ஹிஸ்புல்லாஹ்வை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைத்துக் கொள்வதில் எமக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லையெனவும் அவ்வாறு அவரை இணைத்துக் கொள்வது எனக்கு பரிபூரணமான சம்மதம் எனவும் அம் முக்கியஸ்தர்கள் கூறினார்.
எனினும் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருக்க வேண்டும் எனவும் மேலும் கூறுகின்றனர்.
தற்போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்களை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து நீக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் அமைச்சர் நசீர் ஹாபிசுக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டாது என்ற நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானாவை தலைமை வேட்பாளராக கொண்டு போட்டியிட வேண்டி ஏற்படும்.
அப்படி போட்டியிட்டால் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் இலகுவாக ஆசனத்தை பெற்றுக் கொள்ளுமா என்ற ஒரு கேள்வி இவர்களிடம் காணப்படுகின்றது.
இதனால் ஹிஸ்புல்லாஹ்விடம் ஒரு வாக்கு வங்கி இருப்பதாலும் அவர் ஆரம்ப கால முஸ்லிம் காங்கிரஸ் காரர் என்பதாலும் ஹிஸ்புல்லாஹ்வை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைத்துக் கொள்வதுடன் அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி நிதித்துவம் உறுதிப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

எனினும் அவ்வாறாயின் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய பிரதி தலைவர்களில் ஒருவருமான செய்யது அலி சாஹீர் மௌலானா, ஓட்டமாவடியில் சட்டத்தரணி றிபான், வர்த்தக பிரமுகர் றியாழ், காத்தான்குடியில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பொறியியலாளர் சிப்லி பாறூக், யு.எல்.எம்.என்.முபீன் ஆகியோரை எப்படி கையாள்வது என்ற ஒரு பெரிய சவால் கட்சிக்கும் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் ஏற்படுவதுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா இந்தக் கட்சியில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இணைந்து கொண்டு கட்சியின் மாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை உறுதிப்படுத்தியவர் எனவும் பார்க்கப்படுகிறது
ஹிஸ்புல்லாஹ்வை இணைத்துக் கொள்வதன் மூலம் இலகுவாக S.L.M.C ஆசனத்தை பெறுவதற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
எது எப்படி இருந்த போதிலும் அரசியலில் நிரந்த நண்பனுமில்லை நிரந்த எதிரியுமில்லை என்று கூறுவார்கள். அதற்கேற்றவாறு அரசியலில் எதுவும் நடக்கலாம் நடக்காமலும் விடலாம்.
எம் எஸ் எம் நூர்தீன்
13.11.2022
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :