ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் "குரு பூஜையும் விழாவும்" இன்று காரைதீவில் நடைபெறவுள்ளது.
இன்று (18) ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் இந் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன்
தலைமையில் நடைபெறவுள்ளது.
திருமுன்னிலை அதிதியாக சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள்
(ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலயம் காரைதீவு )
கலந்துகொள்ள, பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பிப்பார்.
காலையில் கண்ணகை அம்மன் ஆலய முச்சந்தியில் அமையப்பெற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச் சிலையை வழமை போல் வணங்கி ஊர்வலம் ஆரம்பமாகும்.
ஊர்வலம் நேராக சுவாமி விபுலானந்த மணி மண்டபத்தை அடைந்ததும், நாவலர் பெருவிழா நடைபெறும்.
ஆன்மீக அதிதிகளாக சிவஸ்ரீ சாந்தரூபன் குருக்கள்
(வீரபத்திரர் சுவாமி ஆலயம் காரைதீவு ), சிவஸ்ரீ மகேஸ்வர குருக்கள்
(நந்தவன சித்தி விநாயகர் ஆலயம் காரைதீவு ), சிவஸ்ரீ ந.பத்மலோஜசிவம்
(மகாவிஷ்ணு தேவஸ்தானம் பெரிய நீலாவணை) , சிவஸ்ரீ சுபாஸ்கர சர்மா
(முருகன் ஆலயம் நாவிதன்வெளி ) ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
கெளரவ அதிதியாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து சிறப்பிப்பார்.
சிறப்பு அதிதிகளாக சோ.ஸுரநுதன் (பிரதிக்கல்வி பணிப்பாளர் திருக்கோவில்), ஆ.சஞ்சீன் (பிரதிக்கல்விப்பணிப்பாளர்,கல்முனை),
வி.ரி.சகாதேவராஜா (உதவிக்கல்விப்பணிப்பாளர்,சம்மாந்துறை) ஆகியோர் கலந்து கொள்வார்கள். மேலும் விஷேட அதிதிகளாக ஒன்பது பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.
ஏற்பாடுகளை, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு. ஜெயராஜி மேற்கொண்டுள்ளார்
0 comments :
Post a Comment