2022ஆம் ஆண்டின் தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
புத்தசாசன மதவிவகார அமைச்சு முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 2022ஆம் ஆண்டின் தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியிடும் நிகழ்வு நேற்று (14) புதன்கிழமை கொழும்பு 10இ பிரதம தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி கலந்து கொண்டார்.

மாணவி அல்ஹாபிழா நுஹா நுஹ்மானின் கிராஅத்தையடுத்து வரவேற்புரையை முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பேருவளை ஜாமியா நளீமியா பீடப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முஹம்மத் விசேட உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் புத்தசாசன மதவிவகார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரன உரையாற்றியதைத் தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் தொலைத் தொடர்புகள் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்தபண்டார அமைச்சருக்கு உத்தியோக பூர்வமாக முத்திரையை கையளித்தார். அதனத் தொடர்ந்து ஏனையவர்களுக்கும் அமைச்சரினால் ஞாபகார்த்த முத்திரை வழங்கி வைத்து உரையாற்றினார்.

அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்இ இராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான்இ சாந்த பண்டாரஇ பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப் முதுநபீன்இ புத்தசாசன மதவிவகார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பத்திரனஇ தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் சமயத் தலைவர்களான கலாநிதி கலகம தம்மரன்சி நாயக்க தேரர்இ கலாநிதி பாபுசர்மா குருக்கள்இ கலாநிதி ஹஸன் மெளலானாஇ அருட்தந்தை கலாநிதி நிஷான் குரேஇ நளீமிய்யா கலாபீட பணிப்பாார் அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் மொஹமட் மற்றும் கல்விமான்கள்இ புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு வருடமும் இடம் பெறும் தேசிய மீலாத் விழாவின்போது அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தினை கௌரவிக்கும் வகையில் முத்திரை ஒன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதற்கு அமைவாக

இம்முறையும் வெளியிடப்படும் முத்திரையில் ஜாமியா நளீமியா கலாபீடத்தின் முகப்புத் தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.இதன்போது மாணவிகளின் கலாச்சார நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த வருடத்திற்கான தேசிய மீலாத் விழா கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி பேருவளை ஜாமியா நளீமியா கலாபீட கேட்போர் கூடத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :