21ஆம் நூற்றாண்டில் ஊடகம்' என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 72 ஆவது ஊடகக் கருத்தரங்கு


அஷ்ரப் ஏ சமத்-
21ஆம் நூற்றாண்டில் ஊடகம்' என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 72 ஆவது ஊடகக் கருத்தரங்கு (03) சனிக்கிழமை முழு நாள் கருத்தரங்காக பாணந்துறை அல் - பஹ்ரியா தேசிய பாடசாலையில்
நடை பெற்றது
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில், பாணந்துறையிலுள்ள 6 பாடசாலைகளின் தமிழ் மொழி மூலமான 100க்கும் மேற்பட்ட சிரேஸ்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா் . இவ் ஊடகக் கருத்தரங்கில், முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களான சிரேஷ்ட ஊடகவியலாளான தாஹா முஸம்மில், மீடியா போரத்தின் செயளாலர் சிஹார் அனீஸ் , இலக்ரோனிக் ஊடகம் பற்றி ஜாவிட் முனவ்வர், , இலக்ரோனிக் ஊடக செயல்முறைகள் பற்றி அஸ்ரப் ஏ சமட் போரத்தின் உதவிச் செயலாளா் சாதிக் சிஹான் ஆகியோர்களும் விரிவுரைகளை நடாத்தினார்கள்
பாணந்துறை அல் - பஹ்ரியா தேசிய பாடசாலையின் 97 பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்தின் ஊடகச் செயலாளர் கல்சூம் ஜிலானி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா் கௌரவ அதிதியாக . ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான என்.எம். அமீன் அத்துடன் பானந்துறை எழுத்தாளா்கள் ஊடகவியலாளா் அகதியா அமைப்பாளா் பானந்துறை அஸ்வா. யாழ் எழுத்தாளா் கலாபூஷணம் பரீட் இக்பால் மற்றும் கல்லுாாியின் ஆசிரியா்களும் கலந்து சிறப்பித்தனர்


இந் நிகழ்வினை இக் கல்லுாாியின் பழைய மாணவிகள் 97வது குழுவின் நிர்வாக உறுப்பினர்கள் ஏற்பாடுகளையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :