திருச்சியில் நந்தவனத்தின் 26 ஆவது ஆண்டு விழா! சிறப்பதிதியாக புரவலர் ஹாஷிம் உமர்!!



ந்தவனம் பவுண்டேஷன் ஏற்பாடு செய்துள்ள இனிய
நந்தவனத்தின் 26 ஆவது ஆண்டு விழா திருச்சி விஜிபி ஹவுஸிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் இரா.தங்கையா தலைமையில் திருச்சி,மேலரண் சாலை, திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத்தில் ஜனவரி 08 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இடம்பெறும்.
 
திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் (பொறுப்பு) பெ .உதயகுமார்
முன்னிலை வகிக்கவுள்ள இந்நிகழ்வில் வெளியிடப்படவுள்ள நந்தவனம் சஞ்சிகையின் முதல் பிரதியை சிறப்பு விருந்தினரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவு ஆலோசகரும் டவர் நிதிய பணிப்பாளர் சபை உறுப்பினரும் புரவலர் புத்தகப் பூங்காவின் ஸ்தாபகத் தலைவருமான இலக்கியப் புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக்கொள்வார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன்,தினகரன்,தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைககளின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர்,பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை பாடத்திட்ட வல்லுநர் தாரை.அ.குமரவேலு,திருச்சி,ராக்போட் நரம்பியல் மையத்தின் மூளை நரம்பியல் நிபுணர் அ. வேணி, திருச்சி கிராமாலயா நிறுவுனர் பத்மஸ்ரீ எஸ். தாமோதரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதன்போது இனிய நந்தவனம் பதிப்பகத்தின் வெளியீடான நாங்களும் மனுஷங்கதான்,பனிபொழியும் தேசத்தில் பத்து நாட்கள் ஆகிய நூல்களும் வெளியிடப்படவுள்ளன. இதன்போது நம்பிக்கை நாயகன் விருது,நந்தவனம் பவுண்டேஷன் வழங்கும் வெற்றித் தமிழன் விருது என்பனவும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :