பெனால்டியில் 4-2 என பிரான்ஸை வீழ்த்திய அர்ஜென்டினா; 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்


டந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை திருவிழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. மொத்தம் 32 நாடுகள் களமிறங்கிய இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

நேற்றிரவு நடந்த இறுதிப் போட்டியில் முதல் பாதியில் அர்ஜெண்டினா இரு கோல்களை அடித்தது. இருப்பினும், 80, 81ஆவது நிமிடங்களில் பிரான்ஸ் அடுத்தடுத்து கோல் அடித்து கம்பேக் கொடுத்தது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்திருந்தது. இதையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் மீண்டும் இரு அணிகளும் கோல் அடிக்க போட்டி மீண்டும் சமனில் முடிந்தது.

இதையடுத்து வெற்றியாளரைத் தேர்வு செய்ய பென்லாடி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா உலகக்கோப்பை வென்றது. அர்ஜென்டினா வெற்றியை அந்நாட்டு ரசிகர்களும் மெஸ்ஸி ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :