ஜக்கிய அரபு இராச்சியத்தின் (துபாய்) நாட்டின் 51வது தேசிய தினம்


அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பில் உள்ள ஜக்கிய அரபு இராச்சியத்தின் (துபாய்) நாட்டின் 51வது தேசிய தினம் டிசம்பா் 01.12.2022 கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் ஜக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான துாதுவா் காலித் நசாா் அல்மிரி தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சா் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டாா். இந் நிகழ்வில் கபினட் அமைச்சா்கள், இராஜாங்க அமைச்சா்கள் . பாராளுமன்ற உறுப்பிணா்கள். இலங்கையில் உள்ள ஏனைய நாடுகளின் துாதுவா்களும் கலந்து சிறப்பித்தனா். 51வது தேசிய தின கேக்கும் துாதுவா் மற்றும் பிரதம அதிதிகளினால் வெட்டிப் பரிமாறப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜக்கிய அரபு இராஜ்சியத்தின் துாதுவா் -

இலங்கை -துபாய் வர்த்தகம் ஊடாக 2020 மற்றும் 2021 19 மில்லியன் அமெரிக்க டொலா்களை முதலிட்டுள்ளது. அத்துடன் ஏற்றுமதி இறக்குமதியில் 2.7 பில்லிய்ன அமெரிக்க டொலா்களை இரு நாடுகளுக்கிடையில் பரிமாற்றம் நடைபெற்றுள்ளன.
துபாய் நாட்டின் உலா்உணவு உதவித் திட்டத்தின் கீழ் 6,867 குடும்பங்களும் 35 ,000 தனிப்பட்ட நபா்களும் நன்மையடைந்துள்ளனா். அத்துடன் இலங்கை மற்றும் எமிரேற்ஸ் விமான சேவைகள் மத்திய கிழக்கு ஏனைய நாடுகளுக்கு சுற்றுலாப்பிரயாணி ஏற்றிவருவதில் அரபு ஜக்கிய இராச்சியம் இலங்கைக்கு விமான சேசையிலும் சேவைகளை செய்து வருகின்றது. 70க்கும் மேற்பட்ட நாடுகள் மின்சக்தி மற்றும் மங்குரே அலயன்ஸ் காலநிலைத் திட்டத்தினை இணைந்து கொண்டு அன்மையில் அமுல்படுத்தியது. அபு துபாயில் உலக செயற்கையிலான பல்கழைக்கழகமொன்றை நிர்மாணித்துள்ளது. உலகின் ஒரு கேந்திர நிலையமாக துபாய் இயங்கி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சுற்றாடல்துறை அமைச்சா் நசீர் அஹமட் உரையாற்றுகையில் -
உலகில் சிறந்த ஒர் நாடாக அரபு ஜக்கிய இராச்சியம் சிறந்து விளங்குகின்றது. அன்மையல் அந் நாட்டுக்கு அமைச்சராக விஜயம் செய்து இலங்கையின் பல்வேறு காலநிலை மற்றும் பல்வேறு இலங்கை அபிவிருத்திகள் உரிய அமைச்சா்களுடன் பேச்சுவாா்த்தை நடாத்தப்பட்டது. இலங்கைத தொழிலாளா்கள் துபாய் நாட்டில் தொழில் செய்து அன்னியச் செலவனியை இலங்கைக்கு அனுப்புகின்றனா். அத்துடன் இலங்கையா்கள் அந் நாட்டில் முதலிட்டு வர்த்தக செயற்பாடுகள் இரு நாடுகளுக்கிடையில் கடந்த 50 வருட காலமாக நட்புரவுடன் நடைபெற்று வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :