இலங்கை இளம் மாதர் முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில் கனடா சிறிலங்கா முஸ்லிம் பெண்கள் அமைப்பின் அனுசரணையுடன் பாதணிகளுக்கான வவுச்சர்கள் உற்பட சுமார் 5500.00 கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு





ஏ.எஸ்.எம்.ஜாவித்-
லங்கை இளம் மாதர் முஸ்லிம் அமைப்பின் ஏற்பாட்டில் கனடா சிறிலங்கா முஸ்லிம் பெண்கள் அமைப்பின் அனுசரணையுடன் மூவினத்தையும் சேர்ந்த மிகவும் வருமாணம் குறைந்த ஏழை மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவுச்சர்கள் உற்பட சுமார் 5500.00 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் நேற்று (20) வழங்கப்பட்டுள்ளன.
மாதர் அமைப்பின் தலைவி தேசமாண்ய பவாஸா தாஹா தலைமையில் தெமடகொட வை.எம்.எம்.ஏ தலைமைக் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கனடா சிறிலங்கா முஸ்லிம் பெண்கள் அமைப்பின் உயர் பீட உறுப்பினர்களான திருமதி சீனத் சுஜா மற்றும் பர்ஹாத் இன்ஹாம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
மாதர் அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் மாணவர்களுக்கு சிறப்பு அதிதிகளால் கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ் அமைப்பு கடந்த பல வருடங்களாக ஏழை மாணவர்கள் மற்றும் அடிப்படைத் தேவையுடையவர்களுக்கு தயைல் இயந்திரங்கள்இ மருத்துவ உதவிகள்இ உலர் உணவுப் பொருட்கள் என பல சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :