எமது பொலிஸ் நிலைய பொலிஸ் துறை சார்ந்தோர் குற்றம் செய்தாலும் சட்ட நடவடிக்கை எடுப்பேன் -கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர்



எஸ்.அஷ்ரப்கான்-
மது பொலிஸ் நிலைய பொலிஸ்துறை சார்ந்தோர் குற்றம் செய்தாலும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் எவ்வித தயவுகளுமின்றி அவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர் தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனைக்குடி கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களின் கலந்துரையாடல் கூட்டம் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.றம்சீன் பக்கீர் தலைமையில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் (11) இடம்பெற்றது.

கல்முனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ. வாஹிட் இக்கூட்டத்தை நெறிப்படுத்தியிருந்தார்.

இங்கு கல்முனை பொலிஸ் நிலையத்தின் சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.றம்ஸீன் பக்கீர்,நாட்டில் வறுமை மற்றும் அது போன்ற எந்த துன்பம் வந்தாலும் குற்றச் செயல்களை செய்ய அனுமதிக்க முடியாது. நாட்டின் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

மக்களோடு மக்களாக இணைந்து மூவின மக்களின் ஐக்கியத்திற்காகவும் பாடுபட நான் விட்டுக் கொடுப்புகளுடன் செயற்பட தயார். ஆனால் எக்காரணம் கொண்டும் குற்றச் செயல்களை செய்வதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது. தற்போது கல்முனை பிரதேசத்தில் குற்றச் செயல்கள் குறைவடைந்தாலும், இன்னும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையோர் இருந்து கொண்டே இருக்கின்றனர்.

சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற பல குற்றச் செயல்களை நாம் நாளாந்தம் எதிர்கொள்கிறோம்.
எனவேதான், சமூகத்திலுள்ள நாம் அணைவரும் இணைந்து இதனை ஒழிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :