காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை பூர்த்திசெய்யும் வகையில் காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயம் ஒரு தொகுதி மருந்து பொருட்களை வழங்கியுள்ளது.
சமகால நெருக்கடியிலிருந்து மீள வைத்தியசாலைக்கு உதவி செய்து ஆலயங்களுள் கந்தசுவாமி ஆலயம் முன்மாதிரியாக திகழ்கிறது.
இவ் ஆலயம் ரூபா 50,000.00 பெறுமதியான பனடோல் சிறப் (pcm 100 ml) 200 போத்தல்களை கொள்வனவு செய்து அன்பளிப்புச்செய்துள்ளது.
ஏழைச்சிறு குழந்தைகளுக்காக ஆலய நிர்வாகத்தினர் இந்த மருந்து பொருட்களை வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரனிடம் கையளித்தனர் .
ஆலய பரிபாலன சபை தலைவர் கே.ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் நேற்று வைத்தியசாலைக்கு சென்று அதனை வழங்கி வைத்தனர்.
மருந்து தட்டுப்பாடு, தொடர்பாக பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரன் உதவும்படி மக்களிடம் பகிரங்கமாக கோரியிருந்தமை தெரிந்ததே.
இதேவேளை ,வைத்திய சாலை மின்பிறப்பாக்கிக்கான எரிபொருளை இதுவரை மூன்று தரப்பினர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment