"நாவலர் வீதி" சேனைக்குடியிருப்பில் திறந்து வைப்பு!.



வி.ரி. சகாதேவராஜா-
லங்கை அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டின் செயற்திட்டங்களில் ஒன்றான நாவலர் வீதி பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைத்தல் நிகழ்வு நேற்று கல்முனை சேனைக்குடியிருப்பில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் கே.செல்வராஜாவின் ஏற்பாட்டில் நேற்று "நாவலர் வீதி" பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வின் தலைவர் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.ஜே.அதிசயராஜ் ,பிரதம அதிதி உலகப் புகழ்பெற்ற ஓவியர் மு.பத்மவாசன்,
ஓய்வு நிலை பொறியியலாளர் த.சர்வானந்தா ,கல்முனை மாநகர சபை உறுப்பினர் கே.செல்வராஜா நாடாவை இழுத்து திரைநீக்கம் செய்து வைத்தார்கள்.

ஆன்மீக ஆர்வலர் உதவிக்கல்விப்பணிப்பாளர் வீ.ரி. சகாதேவராஜா பாடசாலை அதிபர் பொன்.கமலநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர்களான கு.ஜெயராஜி ந.பிரதாப் கலாச்சார உத்தியோகத்தர் திருமதி கே.சுஜித்ரா திருமதி பா.சுஜீவனி ஆகியோரின் நெறிப்படுத்தலில் நிகழ்வு இடம்பெற்றது.

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அடுத்த ஆண்டை (2023) நாவலர் ஆண்டாக ஜனாதிபதி முன்னிலையில் பிரகடனப்படுத்திஇருந்தது .
அந்த நாவலர் ஆண்டின் 17 செயற்றிட்டங்களில் ஒன்றான வீதி ஒன்றிற்கு "நாவலர் வீதி" திறப்பு ,மற்றும் குருபூஜை கோலாகலமாக நடந்ததமை வாயிலாக இலங்கையில் முதன்முதலாக வடக்கில் நல்லூரில் பிறந்த நாவலர் பெருமானுக்கு கிழக்கில் காரைதீவில் பிறந்த விபுலானந்த அடிகளாரின் கோட்டையில் முதல் கௌரவம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :