அக்ரம் பெளண்டேஷன் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு


ஏ.எஸ்.எம்.ஜாவித்-
க்ரம் பெளண்டேஷன் ஏற்பாட்டில் மூவினத்தையும் சேர்ந்த வருமானம் குறைந்த குடும்பங்களின் மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மாளிகாவத்தை பிரதிபா மண்டபத்தில் இன்று (17) நடைபெற்றது.

அக்ரம் பெளண்டேசன் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான எஸ்.அக்ரம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கொழும்பு நகரத்திலுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 500 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அதிதியாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.ரீ.எம்.இக்பால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இவற்றை வழங்கி வைத்தனர்.
அவர் அங்கு உரையாறடறுகையில் இன்றைய நிலையில் வருமானம் குறைந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இவ்வாறான உதவிகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் இன்று மாணவர்களிடத்திலும் பாடசாலைகளிலும் போதை வஸ்துப் பாவனையும் விற்பனையும் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றதுடன் பாடசாலைகளில் போதை வஸ்து பாவனை இருப்பது பாடசாலையின் நன்மதிப்புக்கு கலங்கத்தை ஏற்படுத்துகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் மிகவும் அவதானத்துடனும் கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் என்றார்.

இதன்போது கற்றல் உபகரணப் பொதிகளை அக்ரம் பவுண்டேசனின் தந்தையார் மொமட் ஸாலி உட்டபட வருகை தந்த அதிதிகள் மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர். உதவிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் மேடையில் வந்து தமது ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :