கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் ரிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோய் தடுப்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கூட்டத்தில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம். இஸ்மாயில், அட்டாளைச்சேனை பெரிய ஜும்மாபள்ளிவாயல் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம். ஜுனைதீன், ஏனைய மத நிறுவனங்களின் தலைவர்கள், பிரதேச சபை செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சிவில் சமூக பிரதிநிதிகளும் சங்கங்களின் சார்பான பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
எதிர்வரும் சனிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு அதிகமாக பரவக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற பிரதேசங்களில் பாரிய சிரமதான நடவடிக்கைகளும் கள பரிசோதனையும் இடம்பெற இருப்பதனால் சகலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பணிப்பாளர் பொதுமக்களுக்கும், பொது அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். குறித்த நிகழ்வு அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment