ஒழுக்கத்துடன் கூடிய விளையாட்டே சிறப்பானது! பிரதேச செயலாளர் ஜெகராஜன் கூறுகிறார்.





காரைதீவு சகா-
ழுக்கத்துடன் கூடிய கல்வி சிறப்பானது. அதுபோல ஒழுக்கத்துடன் கூடிய விளையாட்டு சிறப்பானது. அது அவசியமாகும்.

இவ்வாறு காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காரைதீவு பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் குறிப்பிட்டார்.

கிழக்கின் பழம்பெரும் கழகமாம் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது கழகத் தலைமையகத்தில் கழகத் தலைவர் வெ.அருட்குமரன் தலைமையில் நேற்று முன்தினம் (24) இரவு நடைபெற்றது . அதிதிகளாக கழகப் போசகர்களான பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், உத்தரவு பெற்ற நில அளவையாளர் வே . இராஜேந்திரன் , உதவிக் கல்விப்ணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா மற்றும் டாக்டர்.ம.ரமணன் காரைதீவு பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமார், தர்மகத்தா இ.திருநாவுக்கரசு ஆகியோர் கலந்துகொண்டனர் .

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.
ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் போது அவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தீர்த்துக் கொள்ள வேண்டும். தாமதித்தால் விளைவு விபரீதமாகும் என்றார்.
கழகச் செயலாளர் ச.கிரிசாந்த் ஆண்டறிக்கையை சமர்ப்பிக்க , நிதிச் செயலாளர் அ.பிரேமானந்த் கடந்தகால நிதி அறிக்கையை சமர்ப்பித்தார் .

இதன்போது 2023ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது .
புதிய தலைவராக ரி.தவக்குமார், செயலாளராக எஸ்.கிருஷாந்த் , பொருளாளராக எ.பிரேமானந்த் உள்ளிட்ட புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது .
தொடர்ந்து கழக இரவு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :