ஒவியத்தினுடாக இறைவனை காணலாம்,"நாவலர் பெருமான் - வாழ்வும் வாக்கும்" போன்ற தலைப்புகளில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் மு. பத்மவாசன் விளக்கிவருகிறார்.
உலகப் புகழ்பெற்ற ஓவியர் பத்மவாசன் கடந்த வாரம் இந்தியா தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்தார்.
அவர் நேற்று முன்தினம் (20) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் பயிற்சி பட்டறையை நடாத்தினார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் ஆலயத்தில் குருகுல மாணவர்கள்,அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு நேற்று விசேட கருத்தரங்கை நடாத்தினார். ஒவியத்தினுடாக இறைவனை காணலாம்,"நாவலர் பெருமான் - வாழ்வும் வாக்கும்" போன்ற வரைதல் போன்ற நிகழ்வுகளினுடாக மாணவர்களுக்கு வரைதலுடான கருத்துரை"வழங்கப்பட்டது.
இந்நிகழ்வானது" மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மஹராஜ் முன்னிலையில் இடம்பெற்றது.
செயற்பாடுகளை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் அம்பாறை மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மேற்கொண்டார்.
உலக ஓவியர் பத்மவாசன் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
0 comments :
Post a Comment