நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் , நற்பிட்டிமுனை மண்ணிற்கு பெருமை சேர்த்த 2022 க. பொ. த. சாதாரண தர /க. பொ. த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலயம் மற்றும் நற்பிட்டிமுனை பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவர் த.ரவிராஜ் தலைமையில் நற்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆன்மிக அதிதியாக சிவஸ்ரீ சுதர்சன் குருக்களும் ,பிரதம அதிதியாக கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். சரவணமுத்துவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறப்பு அதிதிகளாக சிவசக்தி மகா வித்தியாலய அதிபர் தி.கண்ணபிரான், ஓய்வு பெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர் வ.குலசேகரம், நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற தலைவர் கோ.சர்மா,
மேலும் நற்பிட்டிமுனை ஆலயங்களின் பிரதிநிதிகள்,இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், நற்பிட்டிமுனை அறநெறிப் பாடசாலையின் அதிபர்,பெற்றோர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வுகளை ஆலய பரிபாலன செயலாளர் லோ.பிரேமகாந் ஆசிரியர் நிகழ்வினை தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment