சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் கருங்கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு


ற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் முகமாக அக்கரைப்பற்று தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரிய இன கருங்கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி கூட்டமண்டபத்தில் நேற்று (06) இடம் பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கோழிக் குஞ்சுகளை வழங்கி வைத்தார்.

அக்கரைப்பற்று தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் என்.ரீ.மசூர், தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் கே.எல்.எம்.சாதிக் ஆகியோரின் பங்களிப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஏ.கபூர், சமுர்த்தி மகா சங்க உதவி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத், கருத்திட்ட உதவியாளர் எம்.எம்.எம். முபாறக், சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் எம்.யூ.ஹில்மி, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.சர்பீன் (சந்தைப்படுத்தல்) உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது 100 கருங்கோழிக் குஞ்சுகள் 17 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதய நோய், சுவாச நோய், மூட்டு வலி மற்றும் தோள் நோய் போன்றவற்றிக்கு மிகவும் நிவாரணியாக இந்த கருங் கோழி இறைச்சி பயன்படுகிறது.
மேலும் முட்டை தவிர்ந்த அனைத்து உடல் உறுப்பும் இறைச்சியும் கருமை நிறமாகவும் இதன் இரத்தமும் கரும் சிவப்பாகவுமுள்ள இவ்வினம் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதும் இதன் சிறப்பம்சமாகும்.
சந்தையில் இதன் இறைச்சி மற்றும் முட்டைக்கு மிகவும் சந்தை வாய்ப்புமுள்ளது.

குறைந்த வருமானம் பெறுகின்ற மக்கள் மேலதிக வருமானம் பெறுவதன் ஊடாக ஆரோக்கிய பொருளாதார உயர்வு மிக்க சமூகத்தை கட்டியெழுப்புவது இதனை இலவசமாக வழங்கும் அக்கரைப்பற்று தக்வா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் அவாவாக இருப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :