இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையினால் நடாத்தப்பட்ட மனித உரிமைகள் குறுங்கால பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 19.12.2022ஆம் திகதி கலை கலாசார பீட கலையரங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் விசேட அதிதியாக சிறப்பித்தார்.
பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் துறையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அத்துறையின் முதுநிலை விரிவுரையாளரும் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி எம். அப்துல் ஜப்பார் தலைமை தாங்கியதுடன், நிகழ்வின் கௌரவ அதிதியாக மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ அல்ஹாபிழ் என்.எம்.எம். அப்துல்லாஹ் பங்குபற்றியிருந்தார்.
இந்நிகழ்வில் மனித உரிமைகள் குறுங்கால பாடநெறியினை நிறைவுசெய்த 25 மாணவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர், குறித்த பாடநெறியின் இணைப்பாளர் விரிவுரையாளர் ரீ.எப்ஃ. சஜீதா, கலை கலாசார பீடத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஷ்ஹர் ஆகியோருடன் கலை கலாசார பீடத்தின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment