இந்து கலாச்சார திணைக்களத்தின் மாபெரும் புத்தக கண்காட்சி காரைதீவில் கோலாகலமாக ஆரம்பம்!



வி.ரி. சகாதேவராஜா-
ந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் மாபெரும் புத்தகக் கண்காட்சியையும் நூல் விற்பனையையும் காரைதீவில் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு சுவாமி விபுலானந்த மணிமண்டபத்தில் இந்த புத்தக கண்காட்சியும் விற்பனையும் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை வரை இடம்பெற இருக்கிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை புத்தகக்கண்காட்சி அங்குரார்ப்பண வைபவம் இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ய.அனிருத்தனன் தலைமையில் இடம்பெற்றது.

பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் ,திருமுன்னிலை அதிதியாக மட்.இராமகிருஷ்ண மிஷன் குருகுல உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்சிதானாந்தா ஜீ மகராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் அழைப்பு விடுத்திருந்த இந் நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், உதவி பிரதேச செயலாளர்களான பி.பார்த்தீபன்( காரைதீவு) ச.சதிசேகரன்( திருக்கோவில்) ரி.சுபாகரன்( ஆலையடிவேம்பு) மற்றும் வலயக்கல்வி பிரதி உதவி கல்வி பணிப்பாளர்கள், உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அதிதிகள் வரவேற்கப்பட்டு சுவாமிகளின் இல்லத்தில் விஷேட பூசை மற்றும் சுவாமியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அதிதிகள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர்.
சுவாமிகளின் அருங்காட்சியகம் மற்றும் அறிவகம் என்பவற்றை பார்வையிட்டனர்.
இறுதியில் விபுலானந்த மணி மண்டபத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. அங்கு வானொலி அறநெறிச்சார அறநெறி மாணவர்களுக்கு நூல் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :