பல்கலைக்கழக சமூகத்துக்கு , விரிவுரையாளர்களுக்கு , நிர்வாகத்துக்கு இழுக்கை ஏற்படுத்தாதீர்.-எம்.எஸ்.அமீர் ஹுசைன்



மூக ஊடகம் என்பது தனிப்பட்ட முறையில் அல்லது நிறுவன ரீதியாக அப்படியும் இல்லாவிட்டால் வர்த்தக வாணிப அடிப்படையில் பலவிதமான நோக்கங்களின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது . ஆனாலும் தன் கையில் வாள் கிடைத்தது என்பதற்காக கண்டம் துண்டமாக நினைத்தவாறு எவரையும் வெட்டி வீழ்த்த முடியாது . அதனை மிகவும் பொறுப்புணர்ச்சியோடு பக்குவமாக பயன்படுத்த வேண்டும் .

அதே போன்றுதான் சமூக ஊடகம் என்ற இந்த முக நூல் அல்லது பேஸ் புக் பயன்படுத்தும் முறையும் அமைகின்றது . சிலர் இந்த FACE BOOK யை வைத்துக்கொண்டு தமக்கு யார் யாரெல்லாம் தனிப்பட்ட எதிரிகளோ , அல்லது தனது எதாவது தனிப்பட்ட நோக்கம் நிறைவேற யாராவது தடையாக இருக்கின்றார்களோ அவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு பொறி பறக்க தாக்கும் வகையில் பதிவிட்டு தள்ளுகின்றனர் .

நான் ஏன் இதை எழுதுகின்றேன் என்றால் கடந்த சில நாட்களாக எனது நட்பு வலையமைப்புக்குள் இருக்கும் தம்மை ஊடகவியலாளர் என்றும் அடையாளப் படுத்திக்கொள்ளும் நண்பர் ஒருவர் அடிக்கடி தென் கிழக்கு பல்கலைக்கழகம் பற்றியும் அதன் நிர்வாகம் , ஒருசில விரிவுரையாளர்கள் பற்றியும் தனிப்பட்ட முறையில் தாக்கும் , அவதூறை ஏற்படுத்தும் அல்லது இழுக்கை உண்டுபண்ணும் விதமாக விடயங்களை பதிவேற்றி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது .

எனது பார்வையில் இத்தகைய ஒருவரது தனிப்பட்ட கௌரவத்தை பாதிக்கும் வகையில் பிரசித்தமாக பதிவுகளை ஏற்றுவது அரசியல் அமைப்பின் பிரிவு 15 இன் 1-7 வரையான உப பிரிவுகளுக்கமைய தவறானதாகும் என்றே கருதுகின்றேன் . அரசியல் அமைப்பின் பிரிவு 14 (1) அ மூலம் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உறுதிப்படுத்தப் பட்டிருந்தாலும் அந்த சுதந்திரம் எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்று பிரிவு 15 இன் 1-7 வரையான உப பிரிவுகள் சொல்கின்றன .

இந்த பல்கலைக்கழகம் அல்லது நிர்வாகம் , விரிவுரையாளர்கள் தொடர்பாக குறைபாடுகள் ,குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவற்றை முறையாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறையிடலாம் . அதை செய்யாமல் இப்படியாக சமூக ஊடகம் வாயிலாக மிக மோசமாக பதிவேற்றம் செய்து இன்னொருவரின் கௌரவத்தை கெடுப்பது முற்றிலும் தவறானதாகும். .
பல்கலைக்கழகங்களானது எமது நாட்டின் சொத்து . சமூகத்தின் சொத்துக்களாகும் . தென்கிழக்கு பல்கலைக்கழகமும் கூடுதலாக உப வேந்தர் முதல் முஸ்லீம் விரிவுரையாளர்கள் நிர்வாகிகள் , மாணவர்கள் உள்ள ஒரு இடமாகும் . அப்படிப்பட்ட ஒரு உன்னதமான இடத்திற்கு அவதூறு உண்டுபண்ணும் விதமாக நடந்து கொள்வது அநாகரீகமான செயலாகும் . இந்த நபர் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரை சுட்டிக்காட்டி அவர் ஆய்வுகளை காபி அடித்ததாக சுட்டிக்காட்டி இவ்வாறு பொறி பறக்க மிக மோசமான முறையில் கருத்துக்களை பதிவிடுகின்றார் .

ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆராய்ச்சிகளை செய்பவர்கள் , அசைன்ட்மென்ட்ஸ் எழுதுபவர்கள் , தீஸீஸ் எழுதுபவர்கள் , புத்தகங்களை எழுதுபவர்கள் வெறுமனே தம் சிந்தனைகளை மட்டும் வைத்து எழுதுவதில்லை .தமது ஆய்வை உறுதி செய்ய பலவிதமான மூலாதாரங்களை பரீட்சிக்கின்றனர் , அவற்றில் இருந்து மேற்கோள்களை quotations இடுகின்றனர் .
ஓலை சுவடிகள் , கல்வெட்டுக்கள் , முன்னைய பதிவுகள் , ஆய்வு அறிக்கைகள் , பிரசுரங்கள் , நூல்கள் என்பவற்றை மூலாதாரங்களாக Source (Primary and Secondary Source) மூலாதாரங்களாக பயன்படுத்துகின்றனர் . ஆய்வின் அல்லது புத்தகத்தின் இறுதியில் பின் இணைப்புக்களாகவும் ஆய்வு நூல் பட்டியல்களாகவும் (Bibliography) அல்லது உசாத்துணைகளாக கொடுக்கின்றனர் .

இப்படித்தான் பல நூறு ஆண்டுகளாக ஆய்வாளர்கள் , கல்விமான்கள் , அறிஞர்கள் , நூலாசிரியர்கள் ஆகியோர் கையாண்டு வருகின்றனர் . அவ்வாறு அமையும் போது அதனை காப்பியடித்தல் என்று பொருள் கொள்வதில்லை . ஆனாலும் ஒருவர் இன்னொருவரின் ஆய்வை அல்லது புத்தகம் , வெளியீட்டை நேரடியாக தன்னுடையது என்று தனது பெயரில் வெளிட்டால் அதுவே காப்பியடித்தல் ஆகும் .
புலமைச் சொத்து சட்டத்தின் படி பதிப்புரிமை பெற்றிருந்தால் (Intellectual Property Act and Copy Right) தண்டனைக்குரிய குற்றமாகும் . இப்படியான விஷயங்களை பல்கலைக்கழக செனட் மூத்தவை ஊடாக புலனாய்வு செய்ய முறைப்பாடு செய்யலாம் . அதை செய்யாமல் இப்படியாக அநாகரீகமான முறைகள் மூலம் மானத்தை வாங்குவது கண்டிக்கத்தக்கது .

ஓரிருவர் தவறு செய்தார்கள் என்பதற்காக அங்குள்ள நல்லவர்களையும் மானசீக ரீதியாக பாதிக்கும் அல்லது தெருவில் இறங்கி போக முடியாத நிலைக்கு தள்ளி பலவீனப்படுத்தலாம் . யார் தவறு செய்தாலும் பொதுமக்கள் ஆர்வம் உள்ள விடயங்கள் என்ற அடிப்படையில் தட்டிக் கேற்க அல்லது அதுபற்றிய தகவல்களை வெளிப்படுத்த அரசியல் அமைப்பின் பிரிவு 14 (1) அ வின் படி உரிமை வழங்கப்பட்டிருந்தாலும் அதனை பண்பாடான முறையில் ஊடக சுதந்திரத்தை மதித்து சமூக பொறுப்புணர்வுடன் செய்ய வேண்டும் . பிரச்சனைகளை வெளிப்படுத்தி தீர்வுகளை பெற்றுக்கொடுக்கலாம் . அல்லது தீர்வுகளை முன்வைக்க குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை தூண்டலாம் . அதுவே ஊடக தர்மம் ஆகும் .
அத்தகைய ஊடவியலாளர்களுக்கே சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கின்றது .
 
ஊடகவியலாளர்களுக்கென்று (Dignity) சுய கௌரவம் இருக்கின்றது . அதனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் . சமூக ஊடக பயன்பாட்டாளர்களில் பெரும்பாலானோர் ஊடகவியலாளர்கள் என்றோ ஊடக தொழிசார் அறிவு உள்ளவர்கள் என்றோ எடுகோள் கொள்ளவும் முடியாது . பிரசைகள் ஊடகவியல் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் தடி எடுத்தவர்கள் எல்லாம் ஊடகவியலாளர்கள் போன்றும் பதிவேற்றம் செய்கின்றனர் . அவர்களில் தப்பில்லை .
ஆனாலும் தாம் ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்ளும் இத்தகையவர்கள் எழுத்து என்ற ஆயுதத்தை தனிப்பட்ட குரோதத்துக்காக வஞ்சம் தீர்க்கும் நோக்கில் அல்லது தேவையானவர்களை பழிவாங்கும் எண்ணத்துடன் கையாள்வது கவலையாக இருக்கின்றது .-
பதிவு - அமீர் ஹுசைன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :