கல்வியின் மூலம்தான் ஒரு சமூகத்தின் பிரச்சினைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிலைநிறுத்த முடியும் - அமீர் அலி



எச்.எம்.எம்.பர்ஸான்-
முஸ்லிம் சமூகம் நம்பக் கூடிய ஒரு சொத்தாக கல்வி மாத்திரம்தான் உள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தமிழ், முஸ்லிம் உறவுகள் 61 பேர் மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலிருந்து 30 மாணவர்கள் மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இது இப்பொழுது இந்த மாவட்டத்தில் சில பிரதேசங்களில் பேசுபொருளாக அல்லது துவேசத்தை தூண்டுகின்ற விடயமாக பேசுவதையும், எழுதுவதையும் பார்க்கக் கூடியதாகவுள்ளது.

எப்படி மத்தி கல்வி வலயத்தில் ஐம்பது வீதமான மாணவர்கள் மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பதை ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்கின்ற அல்லது அதை இன ரீதியான கண்ணோட்டத்தோடு பார்க்கின்ற ஒரு நிகழ்வு தற்சமயம் இந்த மாவட்டத்தில் வேறு பிரதேசங்களில் எழுதப்பட்டும், பேசப்பட்டும் வருகிறது.

இவ்வாறு நடந்து கொள்பர்களிடம் நாங்கள் ஒரு விடயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். கல்வி என்கின்ற விடயத்தில் தயவு செய்து யாரும் இன ரீதியான, மத ரீதியான சாயத்தை பூசிக் கொள்ள முயலாதீர்கள்.

அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற நீங்களும் உங்களுடையை பிள்ளைகளின் எதிர்காலம் இன்னும் இன்னும் வளர வேண்டும் என்பதற்கான முனைப்புகளை செய்து கொள்ளுங்கள்.

இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள் எவ்வாறு இந்த மாணவர்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதனை நீங்களும் உங்களுடைய பிரதேசத்தில் செய்ய வேண்டும் என்று உங்களிடத்தில் நாங்கள் விநயமாக கேட்கின்றோம்.
தற்போதைய நிலையில் அதிபர்களும், ஆசிரியர்களும் அவர்களுடைய சொந்த கடமைகளை செய்ய முடியாத அளவுக்கு நேரத்தை பாடசாலைகளோடு செலவிடுகிறார்கள். அவ்வாறான அதிபர்களை நான் பாராட்டுகிறேன்.

இவ்வாறு செயற்படுகின்ற நிலையிலும் பிரச்சினைகள், சவால்கள் என்பன வரும். அதை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு அதிபர்களும், அசிரியர்களும் செயற்பட வேண்டும்.
பெற்றோர்கள் உங்களுடைய பிள்ளைகள் கல்வியில் சாதனை படைக்க வேண்டும் என்று கனவு காணுங்கள், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் நிச்சயமாக இறைவன் அந்த வாய்ப்பை உங்களுக்கு தருவான் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :