தற்போதுள்ள முறையிலோ அல்லது எந்த முறையிலோ தேர்தலை எதிர்கொள்ள மொட்டு தயார்...- அமைச்சர் பிரசன்னா



Ø தேர்தலை ஒத்திவைத்து அதன் கெட்ட பெயரை எடுக்க அரசு தயாராக இல்லை....
ள்ளூராட்சி தேர்தல் பழைய முறை அல்லது தற்போதுள்ள முறையின் கீழ் கீழ் அல்லது எந்த வகையிலும் நடத்தப்பட்டால், அதை எதிர்கொள்ள பொதுஜன பெரமுன தயார் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன .ரணதுங்க தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (21) நடைபெற்ற கம்பஹா பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பிய வினாக்களுக்கு பதில் கூறுகையில் இதனைக் குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளதால் இந்த நேரத்தில் தேர்தலை நடத்த ரூபாய் 20 பில்லியன் செலவழிக்கப்படும், மேலும் மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

ஆனால் தேர்தல் தள்ளிப்போனால் தேர்தலை ஒத்திவைப்பதான குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் பொறுப்பாக வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் வலியுறுத்தினார். திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியதாவது:

கட்சி என்ற ரீதியில் தேர்தலை ஒத்திவைக்கும் நம்பிக்கை எமக்கு இல்லை. தற்போது கம்பஹா மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை அழைத்து தேர்தல் வேலைத்திட்டம் தயார் செய்யப்பட்டு அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக உள்ளனர்.

உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்கள் அதிகமாக இருப்பதாக பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர். இதை 50 சதவீதமாகக் குறைத்து செலவுகளை குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். இந்த நிலைமை நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டது. இப்போது உள்ளூராட்சி சபைகளில் வேலை செய்வதற்கு போதுமான இடம் இல்லை. எனவே, உள்ளூராட்சி உறுப்பினர்கள் இதை விட அதிகம் குறைவாக இருந்தால் நல்லது என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். நான் மேல் மாகாண சபையின் உள்ளூராட்சிக்கு பொறுப்பான அமைச்சராக பணியாற்றினேன். அந்த அனுபவத்துடன் பேசுகிறேன். உள்ளூராட்சி சபை தேர்தல் பழைய முறையில் தேர்தல் நடத்தினால் அதற்கும் தயாராக இருக்கிறோம். தற்போதைய முறைப்படி நடத்தினால் அதற்கும் தயாராக இருக்கிறோம்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எடுக்க முடியாத நிலை உள்ளது. ஆனால் கடந்த காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி தற்போது முகாமைத்துவம் செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இப்போது உள்ள மிகப்பெரிய நெருக்கடி பொருட்களின் விலை நிர்வகிக்க முடியாமல் உள்ள்தாகும். அதேபோல் கட்டுமானத் துறையயும் வீழ்ச்சி அடைந்து விட்டது. இந்த நெருக்கடிகளைத் தீர்ப்பதற்குத் தேவையான பின்னணி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இத்தருணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற வேண்டுமா என்ற தேவையை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு கட்சியாக, நாங்கள் அதற்காக இருக்கிறோம் தயாராக இருக்கிறோம்.

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் போது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால் சுமார் 20 பில்லியன் ரூபா செலவிடப்படும் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெரியும். எதிர்க்கட்சியினர் முட்டாள்கள் இல்லை. இப்படிப்பட்ட நேரத்தில் தேர்தலுக்குப் போனால் மக்கள் அதிகம் கஷ்டத்திற்குள்ளாகுவார்கள். ஆனால் தேர்தல் தள்ளிப்போனால் தேர்தலை ஒத்திவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நாங்கள் அப்படியொரு குற்றச் சாட்டை எடுக்க விரும்பவில்லை. எனவே நாம் தேர்தலுக்கு தயார்.தற்போதுள்ள இந்த அமைப்பில் பணக்காரர்களும் போதைக்கு அடிமையானவர்களும பணத்தை செலவளித்து தேர்தலுக்கு வர முடியும். ஆனால் ஒரு சாதாரண மனிதனுக்கு தேர்தலுக்காக பல தடைகள் உள்ளன. அதனால் தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். அனைத்து தேர்தல் முறைகளிலும் மாற்றம் வர வேண்டும் என்று நம்புவதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :