இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகத்தில் கடமையாற்றுகின்ற சிரேஷ்ட உதவி நூலகர் கலாநிதி எம். எம். மஸ்ரூபா அவர்களும் அவரது கணவர் பிரபல உயிரியல் விஞ்ஞான ஆசிரியர் ஹாமிம் சார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு உரையாற்றிய அதன் தலைவர் இவ் நலன்புரி அமைப்பானது கடந்த பத்து வருடங்களுக்கு முதல் பல்கலைக்கழக நூலகத்தில் கடமையாற்றும் கல்வி சாரா ஊழியர்களின் நலன்களினை பேணுவதற்காகவும் ஊழியர்களிடத்தில் ஒரு சுமூகமான குடும்ப நல்லுறவினை பேணுவதற்காகவும் அவர்களின் கஷ்ட நஷ்டங்களிலும் இன்ப துன்பங்களிலும் பங்கெடுக்கும் அதேவேளை அவர்களுக்கு ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடிகளின் போது பண உதவியை செய்து உதவுவதற்காகவும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதென்றும் அத்தோடு மட்டுமல்லாமல் பல்கலைக நூலகத்தில் செய்யப்படுகின்ற பொதுவான வேலைகளில் ஒரு புரிந்துணர்வுடன் கூட்டுப் பொறுப்புடன் செய்வதற்கு இந் நூலக நலன் புரி அமைப்பு செயல்படுகின்றது என்றும் கூறினார்.
மேலும் நலன்புரி அமைப்பின் ஊடாக நூலகத்தில் கடமையாற்றும் கல்விசார், கல்வி சாரா ஊழியர்களின் தொழில் சார் கல்வி முன்னேற்றங்களில் பங்கெடுப்பது அதற்காக அவர்களினை ஊக்கப்படுத்துதல் மற்றும் அவர்களை பாராட்டி கௌரவித்தல் போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் தொடர்ந்து முன்னெடுப்பது என்றும் இறுதியாக இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு பல வழிகளிலும் எங்களுக்கு உதவிய எங்களது நூலகத்தில் கடமையாற்றிவிட்டு தற்பொழுது அவர்களது குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வசிக்கின்ற நண்பர்களான ஏ.ஜே.எம். றாசிக், எம். ஐ. ஷாகிர் ஹுசைன் மற்றும் பதவி உயர்வு பெற்று இலங்கையிலுள்ள அமெரிக்கன் சென்டரில் கடமை புரிகின்ற நண்பர் ஏ.ஜே.எம் நௌஷாத் அவர்களுக்கும் நன்றி கூறி தனதுரையை முடித்துக் கொண்டார்.
இதன் முதற்கட்டமாக பல்கலைக்கழக நூலகத்தில் கடமையாற்றுகின்ற சிரேஸ்ட உதவி நூலகர் எம். எம். மஸ்றூபா அண்மையில் கலாநிதி பட்டத்தினை பெற்றதன் மூலம் எமது நூலகத்துக்கும் எமது பிராந்திய முஸ்லிம் பெண் சமுதாயத்திற்கும் பெருமையினை தேடி தந்தமைக்காக அவர்களை பாராட்டி கௌரவித்த நிகழ்வும் இடம்பெற்றது.
இங்கு கெளரவித்து பாராட்டப்பட்ட சிரேஸ்ட உதவி நூலகர் கலாநிதி எம். எம் .மஸ்றூபா அவர்கள் உரையாற்றுகையில் உண்மையில் இன்று எனக்கு அளிக்கப்பட்ட இந்த கௌரவிப்பினையும் பாராட்டினையும் நான் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கின்றேன் என்றும் இவ்வாறான கௌரவிப்புக்கள் எமது நூலகத்தில் தொடர்ந்தும் நடைபெற வேண்டும் என்றும் அதில் எல்லோரும் எதிர்காலத்தில் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் கூறிய அவர் இன் நலன் புரி அமைப்பின் சேவைகளையும். அவர்களது பணிகளையும் நான் மெச்சுகின்றேன் அதேநேரம் அவர்களை பாராட்டுகின்றேன் அதேபோல் இதில் உள்ள சகல அங்கத்தவர்களும் உங்களின் எதிர்கால தொழிற்சார் கல்வி நடவடிக்கைகளில் முன்னேற வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில் உங்களது பிள்ளைகளினை நீங்கள் அவர்களது கல்வி வளர்ச்சியில் முழு பங்களிப்புடன் செயல்படுத்துங்கள் அவர்களை வழிநடத்துங்கள் அவர்களை எதிர்காலத்தில் நல்லதொரு பிரஜையாக மாற்றுங்கள் என்றும் கூறினார் அத்தோடு கல்வி கற்பதற்கு வயது தடையல்ல நீங்கள் கற்க வேண்டும் இன்னும் பல வழிகளில் முன்னேற வேண்டும் என்று கூறியதுடன் இன்றைய வாழ்க்கை காலகட்டத்திற்கு ஏற்ற பல புத்திமதிகளையும் கூறி தனதுரையை முடித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்ப சகிதம் கலந்து கொண்டனர் . மேலும் இந்நிகழ்வை அலங்காரிப்பதற்காக சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையில் பல சுவாரசியமான போட்டி நிகழ்ச்சிகள் இடம் பெற்றதோடு அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டு சுவையான பகற்போசனத்துடன் இனிதே முடிவுற்றது.

0 comments :
Post a Comment