கல்முனை ஆதரவைத்தியசாலையில் நிணநீர் தேக்க வீக்க முகாமைத்துவம் மற்றும் யானைக்கால் நோய் ஏற்படாமல் தடுத்தல் சம்பந்தமான பயிற்சிப் பட்டறை ஒன்று இடம் பெற்றது.
இப் பட்டறை கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக பிரபல சமூக வைத்திய நிபுணர் டாக்டர் முரளி வள்ளிபுரநாதன் மற்றும் பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது நிணநீர் தேக்க வீக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது? இந்நிலை எவ்வாறு ஏற்படாமல் தடுப்பது? இந்நிலை ஏற்பட்டால் எவ்வாறு பராமரிப்பு வழங்க வேண்டும்? இந்நோய் நிலையின் போது செய்யப்படும் சத்திர சிகிச்சைகள் பற்றிய தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
வளவாளர்களின் விளக்க உரைகளுக்கேற்ப தாதிய உத்தியோகத்தர்களின் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சாமித்தம்பி இராஜேந்திரன் நன்றியுரையாற்றினார்.
0 comments :
Post a Comment