கிழக்கின் பொத்துவில் மண்ணுக்கு பெருமை சேர்த்த பொறியியலாளர் எம்.எஸ்.எம்.முஸ்தாலி



அஸ்ஹர் இப்றாஹிம்-
பொத்துவிலில் பிறந்து சாய்ந்தமருதில் திருமணபந்தத்தில் இணைந்த பொறியலாளர் எம்.எஸ்.எம். முஸ்தாலி (B.Sc. Engineer), இலங்கை பொறியலாளர் நிறுவனத்தால் (Institution of Engineers, Sri Lanka) தவிசாளராகவும் மற்றும் சபை உறுப்பினராகவும் (Council Member) 2022 இல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை பொறியலாளர் நிறுவனத்தாலும் லண்டன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிருவனத்தாலும் Chartered Engineer and International professional Engineer ஆகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது மொபிடல் தொலைதொடர்பு நிறுவனத்தின் தகவல் மத்திய நிலையத்தில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் 15 வருடத்திற்கு மேலான அனுபவத்துடன் சிரேஷ்ட முகாமையாளராக கடமை புரியும் எம்.எஸ்.எம்.முஸ்தாலி, கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பிரதேசத்தை பிறப்பிடமாக் கொண்ட தென் கிழக்கின் முதலாவது பொறியலாளரும், C.Eng., MIE(Sri Lanka ), MICE(London), நீர்ப்பாசன திணைக்கள பிரதி பணிப்பாளரும், ஊவா மாகாண பொறியலாளர் சேவைகள் பிரதி செயலாளரும், தென்கிழக்கு கரையோர ஆசிய அபிவிருத்தி வங்கியின் வீதி கட்டுமான செயல்திட்ட பொறியியல் ஆலோசகருமாக கடமையாற்றிய காலஞ்சென்ற கே.ஆர்.எம்.சஹீட் அவர்களின் கனிஸ்ட புதல்வருமாவார்.

இவர் பொத்துவில் மத்திய கல்லூரியில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு ரோயல் கல்லூரியில் இடைநிலையிலும் உயர் தரத்திலும் கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் முதுமாணி பட்டமும் முடித்தவர். தற்போது LLB பட்டமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொத்துவிலின் சிறந்த கல்வியலாளர் முஸ்தாலி என்றும் பொத்துவில் மண்ணின் அடையாளமே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :