அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச கராத்தே போட்டிகளில் 2015 தொடக்கம் 2021 வரையான காலப்பகுதியில் பதக்கங்களைப் பெற்றவர்களுக்கு வர்ண விருது வழங்கும் விழா சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் இலங்கை கராத்தே டூ சம்மேளன, கிழக்கு மாகாண தலைவரான முஹம்மத் இக்பால் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டதுடன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முஹம்மட் மாஹிர் உட்பட பலர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர்.
இதில் கிழக்கு மாகாணம் சார்பாக வெற்றிபெற்ற 82 வீரர்களுக்கு வர்ண விருது வழங்கப்பட்டதுடன், கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தில் நீண்ட காலமாக சேவையாற்றி வருகின்ற சிரேஸ்ட போதனாசிரியர்கள் ஐந்து பேருக்கு அதி சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
அத்துடன் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றுத்தந்த சங்கங்களின் எட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு விசேட பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் (IMA, RKO) ஆகிய சங்கங்களின் மாணவர்களினால் கராத்தே நிகழ்ச்சி கண்காட்சிகளும் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment