அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு நேற்று (10) தெஹிவளை தனியார் வரவேற்பு மண்டபத்தில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பொறியியலாளர் றிஷாத் பதியுதீன் தலைமையில் நடைபெற்றது.
இப்பேராளர் மாட்டில் கட்சியின் யாப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து சிரேஷ்ட சட்டத்தரணியும் கட்சியின் சட்ட செயலாளருமான ருஸ்தி ஹபீப் தெளிவுபடுத்தினார்.
கட்சியின் உயர்பீட முடிவிற்கிணங்க கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். இதற்கமைய கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வின்போது விஷேட அழைப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் தமிழக சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் உட்பட தமிழக முக்கியஸ்தர்கள் வருகை தந்து கலந்து கொண்டனர்.
பேராசிரியர்களான கே.எம்.காதர் மொகிதீன், ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் விஷேட உரைகளையும் நிகழ்த்தினர்.
கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தொடக்கவுரை நிகழ்த்தினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் கட்சியின் கடந்தகால, எதிர்கால திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த பேராசிரியர்களான கே.எம்.காதர் மொகிதீன், ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் கட்சித் தலைவரினால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இதில் நாடளாவிய ரீதியில் கட்சியின் செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment