காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!



அபு அலா -
ட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை காப்போம் நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (23) மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

மட்டு. ஊடக அமையத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரன் (திலிப்) கலந்துகொண்டு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணிகளை வழங்கி வைத்தார்.

இலங்கை பத்திரிகை பேரவையின் 22வது ஆண்டின் மருத்துவக் கட்டுரைக்கான உயர் ஊடகவியல் தேசிய விருதைப்பெற்ற ஊடகவியலாளர் மட்டு.துஷாரா மற்றும் சமூக விழிப்புணர்வு, கலை கலாசார மருத்துவ ஆக்கங்களை பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்தி வருகின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் ஆகியோர்களை இந்நிகழ்வின்போது காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரனால் பாராட்டி ஞாபகச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், காப்போம் நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :