துருக்கி மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக அமைச்சர் நஸீர்



ஏறாவூர் சாதிக் அகமட்-
துருக்கியில் ஆரம்பமாகியுள்ள "ஷீரோவேஸ்ட்" மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் கலந்து கொண்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டுக்கு துருக்கியின் முதற்பெண்மணி எமினிஎடோர்கன் தலைமை தாங்குகிறார்.
இம்மாநாட்டில் உரையாற்றிய அமைச் சர் நஸீர் அஹமட் குறிப்பிட்டதாவது, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் பிரதான பங்களிப்புக்கு

இளைஞர்களின் செயற்பாடுகளை அதிகரிப்ப து அவசியம். சுற்றாடற் செயற்பாடுகளில் இளைஞர்களையும் உள்ளீர்ப்பதனூடாகவே, இத்துறையில் அவர்களின் பங்களிப்புக்களை உயர்த்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட் டார்.
காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் வீண்விரயங்களை பூச்சியமாக்கல் என்ற தொனிப் பொருளில் இம்மாநாடு துருக்கியில் நடைபெறுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :