அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த செல்வி சீனித்தம்பி சசிதினி சட்டமாணி இளங்கலை பட்டதாரியாக இவ்வருடம் வெளியாகியுள்ளார்.
செல்வி சீனித்தம்பி சசிதினி சட்டமாணி இளங்கலை கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பட்டதாரியாக (2ம் வகுப்பு) சித்தியடைந்துள்ளார்.
இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார்.
அத்துடன் மட்டக்களப்பு இ.கி.மி. மகளிர் மகா வித்தியாலயம், கல்லடி மற்றும் காரைதீவு இ.கி.மி. பெண்கள் பாடசாலை ஆகியவற்றில் இடைநிலைக் கல்வியை பயின்று, காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் தனது உயர்கல்வியினை தொடர்ந்தார்.
சட்டமாணி இளங்கலை சட்ட பீட பட்டதாரியாக 2ம் வகுப்பு மட்டத்தில் சித்தியெய்திய, அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த சீனித்தம்பி சசிதினி அவர்கள் எதிர்காலத்தில் சட்டத்துறையில் சிறந்து விளங்க பலராலும் பாராட்டப்பட்டது.
சசிதினி அட்டப்பளத்தைச் சேர்ந்த முதலாவது சட்ட பீட மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment