கணித பாட ஆசிரியர் வெள்ளக்குட்டி மகேஸ்வரன் அவர்களின் ஓய்வு பெறும் பிரியாவிடை விசேஷமாக நடத்தி அசத்திய ஒரு பாடசாலை.
33 வருட ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பிரியாவிடை நடத்திய பின்பு அவருக்கு ஆளுயர மாலைகள் சூட்டி பாண்ட் வாத்தியம் முழங்க இடையிடையே பட்டாசுகள் வெடிச் சத்தம் முழங்க அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்ணீர் மல்க அவரது வீட்டுக்கு கொண்டுசென்று விட்ட சம்பவம் கடந்த வாரம் நடைபெற்றது.
இச் சம்பவம் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. அங்கு கணிதபாடம் கற்பித்த ஆசிரியர் வெள்ளக்குட்டி மகேஸ்வரன் தனது 33 வருட சேவையின் பின்பு கடந்த வியாழன் அன்று விடைபெற்றபோது அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.
பிரதம அதிதியாக அப்பாடசாலையின் இணைப்பாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார். இதன் போது மகேஸ்வரன் பாரியார் மக்கள் குடும்பத்தினர் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு அவருக்காக பாராட்டு மற்றும் பரிசுகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தப்பட்டது .
அதன் பின்பு அவருக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் மாறிமாறி ஆளுயர மாலைகள் சூட்டினர். பின்னர் பாண்ட்பாத்தியம் முழங்க பாடசாலையில் இருந்து அழைத்துச் சென்று அவரது வீட்டுக்கு சென்று விட்டு வந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஆன்மீக பணியில் சிறி சங்கர் ஜீயின் சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குருவாக விளங்கும் சிவாயநய சிவயோகி மகேஸ்வரன் ஆசிரியர்
" இது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. கல்விச்சமுகத்திற்கு மனமார்ந்த நன்றிகள்" என்று கண்ணீர் மல்க கூறினார்.
0 comments :
Post a Comment