கிழக்கு மாகாண கலால் திணைக்கள உதவி ஆணையாளராக தங்கராஜா நியமனம்



வி.ரி. சகாதேவராஜா-
கிழக்கு மாகாண மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளராக ரோட்டரியன் சண்முகம் தங்கராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணம் மற்றும் ஊவா மாகாணத்திற்கு 01.01.2023 தொடக்கம் கலால் திணைக்களத்தின் புதிய ஆணையாளர்களாக ரோட்டரியன் சண்முகம் தங்கராஜா மற்றும் ரோட்டரியன் செல்வராசா ரஞ்சன் ஆகியோர்பதவி உயர்வு பெற்று கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட கலால் அத்தியட்சகராக கடமையாற்றிய செல்வராஜா ரஞ்சன் ஊவா மாகாணத்தின் புதிய கலால் உதவி ஆணையாளராகவும்;, அம்பாரை மாவட்டத்தின் கலால் அத்தியட்சகராக கடமையாற்றிய சண்முகம் தங்கராஜா கிழக்கு மாகாணத்தின் புதிய உதவி ஆணையாளராகவும் பதவி உயர்வு பெற்று 01.01.2023 அன்று தங்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக்கடிதங்களை நேற்று மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குணசிறி அனுப்பி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :