ஏறாவூர் சமூக சேவைகள்அபிவிருத்தி ஒன்றியத்தினால் கௌரவிக்கும் நிகழ்வு!


ஏறாவூர் சாதிக் அகமட் -
றாவூர் சமூக சேவைகள்அபிவிருத்தி ஒன்றியத்தினால் இன்று ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி 9A பெறுபேறுகளைப் பெற்ற 29 மாணவ மாணவிகளைப் பாராட்டி பதக்கம் அணிவித்து சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றுநடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர் சாதிக் அகமடும் கௌரவிக்கப்பட்டார். சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் மகளிர் அணிக்கான அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

ஏறாவூர் சமூக சேவைகள்அபிவிருத்தி ஒன்றியம் இன்று ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலத்தின் கேட்போர் கூடத்தில் இவ்வருடம் ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைக்குத் தோற்றி ஒன்பது பாடங்களிலும் 9 A தரச் சித்தியெய்திய மாணவ மாணவிகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வினை நடாத்தியது.

அமைப்பின் தலைவர் MFM. பாறூக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றி 9A பெறுபேறுகளைப் பெற்ற 29 மாணவர்கள் பதக்கம் அணிவித்து சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வாலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. MJF. றிப்கா அவார்களும், கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபையின் கௌரவா உறுப்பினரும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தருமான அல்ஹாஜ் U றசீட் அவர்களும் ஏனைய அதிதிகளாக ஏறாவூர் நகர பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்SAC நஜிமுதீன், SSDO அமைப்பின் கல்விக் குழுவிற்குப் பொறுப்பான பிரபல விரிவுரையாளர் A.றியாஸ் "(SLTES) அவர்களும், SSDO இன் பங்காளி அமைப்புகளின் தேசிய தலைவரும் புத்தள மாவட்ட PSSO அமைப்பின் தலைவருமான மௌலவி தாஹிர் ஹம்ஸார் அவர்களும், PSSO அமைப்பின் உதவிச் செலாளர் கௌது இனாமுல்லாஹ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

அமைப்புகளின் தேசிய தலைவர் மௌலவி தாஹிர் ஹம்ஸார் அவர்கள் தனது உரையில் இந்த 9A மாணவர்களை பாராட்டி கௌரவிப்பதென்பது இவர்கள் உயர்தரப் பரீட்சையிலும் இதே போன்று உயர் சித்திகளைப் பெற்று உயர்பதவிகளைப் பெற்று நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறந்த பிரஜையாக திகழ வழிவகுக்கும் முகமாக அவர்களை ஊக்கப்படுத்துவதேயாகும் எனத் தெரிவித்தார் .

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் எத்தனையோ வறுமைக் கேட்டிற்குப்பட்ட ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் இம்மாணவர்களும் சிறப்பாக கல்வி கற்பதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும் .

அந்த வகையில் நாடுதழுவிய ரீதியில் இணைந்த அமைப்புகளாக செயற்பட்டு வருகின்ற எமது ஏறாவூரைச் சேர்ந்த SSDO ஆனது இம்மாணர்களுக்கான பாடசாலைக்கல்வி கற்பதற்கான கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் மாணவர்களுக்கான சப்பாத்து போன்றவற்றை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . எனவே இவர்களோடு ஏறாவூரைச் சேர்ந்த அனைத்தும் செல்வந்தர்களும். தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து இவற்றைப் பெற்றுக் கொடுக்க முன்வார வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஊடகவியலாளர் சாதிக் அகமட் அவர்களுக்கு சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தினால் கௌரவிக்கப்பட்டு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது மேலும் இன்றைய நிகழ்வின் போது சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் மகளிர் அணிக்கான அடையாள அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டன குறிப்பிடத்தக்கது




























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :