டார்க் (DArk) பவுண்டேஷனின் பூரண அனுசரணையில் 1.5 மில்லியன் பெறுமதியான கல்முனை கல்வி வலயத்திற்க்குட்பட்ட 28 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 350 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களின் கௌரவிப்பும் டார்க் (DArk) பவுண்டேஷனின் தவிசாளர் டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பர் தலைமையில் டார்க் (DArk) பவுண்டேஷனின் பொது செயலாளர் ஊடகவியலாளரும், அல்- மீசான் பவுண்டேஷன் தலைவருமான நூறுல்ஹுதா உமரின் ஒருங்கமைப்பில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக (19/12/2022) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சகுதுல் நஜீம், கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம் எம் ஆஷிக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளர்களான நஸ்மியா சனூஸ், யு.எல். சாஜித், கோட்டக்கல்வி அதிகாரி வீ.எம். ஸம்ஸம், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், கல்முனை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சாரிக் காரியப்பர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் உட்பட கல்விமான்கள், புத்திஜீவிகள், துறைசார்ந்த முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் தேசிய சாதனை புரிந்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள், சர்வதேச மட்டத்தில் சாதனை படைத்த மாணவி, மாவட்ட அளவில் முதன்மை நிலை பெற்ற மாணவர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment