ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் சின்ன‌மாக‌ ஒட்ட‌க‌ம்



2022ம் ஆண்டு இல‌ங்கை தேர்த‌ல் திணைக்க‌ள‌த்தால் அர‌சிய‌ல் க‌ட்சியாக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் சின்ன‌மாக‌ ஒட்ட‌க‌ம் தேர்த‌ல் ஆணைய‌க‌த்தால் அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

இது ப‌ற்றி க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்த‌தாவ‌து,
இறைவனின் ஆச்ச‌ய‌ர்மான‌ ப‌டைப்பான‌ ஒட்ட‌க‌த்தை நாம் இப்போது எம‌து க‌ட்சியின் சின்ன‌மாக‌ க‌ட்டிப்போட்டுள்ளோம்.

17 வ‌ருட‌ கால‌ அர‌சிய‌ல் செய‌ற்பாடு க‌ட்சியை ப‌திய‌ கை கொடுத்த‌து.
எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னுக்கே முத‌ல் ந‌ன்றி என‌ தெரிவித்தார்.

இல‌ங்கை ம‌க்க‌ளுக்கு நேர்மையான‌ அர‌சிய‌ல் ச‌க்தியாக‌ எம‌து க‌ட்சி தொட‌ர்ந்தும் செய‌ற்ப‌டும் என‌ தெரிவித்தார்.

அத்துட‌ன் முஸ்லிம் ச‌மூக‌த்தில் உள்ள‌ க‌ட்சிக‌ளின் பொய், ஏமாற்று, ஊழ‌ல், ப‌ண‌ம் கொட்டுத‌ல் கார‌ண‌மாக‌ ச‌மூக‌ம் அர‌சிய‌லில் வெறுப்ப‌டைந்துள்ள‌ நிலையில் எம‌து ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ச‌மூக‌த்துக்கு மாற்றீடான‌ க‌ட்சியாக‌ செய‌ல்ப‌டும் என்றார்.

அர‌சிய‌லில் உண்மை, நேர்மை, வெளிப்ப‌டைத்த‌ன்மை என்ப‌தே எம‌து க‌ட்சியின் கொள்கையாக‌ இருக்கும் என‌வும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :