தாமரைக்கேணியில் நீரில் மூழ்கி சிறுமி பலி.



ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர், தக்வா பள்ளி வீதி , தாமரைக்கேணியை சேர்ந்த மர்சூக் பாத்திமா றினா (07) என்ற சிறுமியே நேற்று (22/12) மாலை குறித்த கேணியில் சிறுவர்கள் பலருடன் விளையாட்டுக்காக இறங்கி குளிக்கும் போதே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

மண் அகழ்வினால் குறித்த கேணியில் ஒருபக்க சாய்வாக நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டதை அறியாத இக்குழந்தை, சுமார் 05 அடி ஆழமுள்ள நீருக்குள் சென்றதால் மீள முடியாமல் நீரில் மூழ்கியுள்ளார்.

சிறுமி நீரில் மூழ்குவதை அவதானித்த ஏனைய சிறுவர்கள், சவுக்கடி வீதிக்கு ஓடிவந்து அவ் வழியால் பயணித்தவர்களிடம் விடயத்தை தெரிவிக்க, அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை சடலாமாகவே மீட்டுள்ளனர்.

ஏறாவூர் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சடலத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொள்ள ஏறாவூர் பொலிசாருடன் திடீர் மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் அவர்கள் சென்று, சம்பவம் இடம்பெற்ற தாமரைக்கேணி குளத்தினையும் பார்வையிட்டார்.

விசாரணை முடிவில் பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு ஏறாவூர் பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தார்.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :