ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு எமக்கு தபால் பெட்டி சின்னத்தினை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் ஊடகவியலாளா் மாநாடு கட்சியின் தலைவா முன்னாள் பிரதியமைச்சா் பிரபா கனேஸ் தலைமையில் இன்று17ஆம் திகதி சுகாதாச ஸ்போட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஊடகவியலாளா் மாநாட்டில் கருததுத் தெரிவித்த பிரபா கனேஸ்; 12 வருட காலம் எமது கட்சியை தேர்தல் ஆணையாளா் பல காரணங்கள் காட்டி அங்கீகரிக்கவில்லை. இருப்பினும் இம்முறை எமக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு கடந்த 12 வருடங்கள் ஆனாலும் இனி எதிா்காலத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற முறையில் நாங்கள் மிகவும் உத்வேகத்துடன் செயல்பட முடிவு செய்துள்ளோம். எதிா்வரும் காலத்தில் இடம்பெரும் அனைத்து தோ்தல்களிலும் எமது கட்சி கொழும்பு, களுத்துறை வன்னி , மட்டக்களப்பு, அம்பாறை,தனித்து போட்டியிடுவோம். அஙகு எமது கட்சியின் செயல்பாடுகள் கடந்த காலத்தில் இடபெற்றன. . எதிா்காலத்தில் நாடுமுழுவதிலும் எமது கட்சி விஸ்தரிக்கப்படும்.
.
தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதே எமது நோக்கமாகும். குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இன்றி கஸ்டப்படும் மக்கள் நிர்கத்தியாகியுள்ளனா். கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் வளா்ச்சி 2015ஆணடுக்கு பிறகு எந்தவொரு அரசியல்வாதிகளினாலும் அபிவிருத்தி செய்யப்படவில்லை. நான் பிரதியமைச்சராகவும் முன்னைய அரசுடன் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் 45 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்திருந்தேன். அதன் பின்னா் கொழும்பில் எவ்வித அபிவிருத்தியும் இடம் பெறவில்லை. 6மாத காலங்கள் கனனி சம்பந்தப்பட்ட பிரதியமைச்சராக இருந்த காலத்தில் பாடசாலைகளில் கனனிக் கூடங்களை ஆரம்பிதது வைத்தேன். அதன் பின்னா் மக்களது வாக்குகளை பெற்றவா்கள் எவ்வித அபிவிருத்தியையும் செய்யதாக தெரியவில்லை. தமிழ் மக்களது கோசம் மட்டும் பேசி நமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது. அபிவிருத்திகளையும் மக்களுக்கு பெற்றுக்கொடுத்து அவா்களது அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் வேண்டும்.
சிறுபான்மைகளது தேவைகள், அடிபபடை வசதிகள் கல்வி, தொழில் வாய்ப்பு, வீடமைப்பு வியாபாரம் இளைஞா்களது அபிலாசைகளை நாம் செயல்படுத்தி வருகின்றேனம். அரகலையில் ஈடுபட்ட பல இளைஞா் யுவதிகள் எமது கட்சியுடன் இணைந்து வருகின்றனா். அவா்கள் புதியதொரு அரசியல் கட்சியில் முன்னெடுத்துச் செல்வதனையே விரும்புகின்றனா். எதிா்வரும் உள்ளுராட்சித் தோ்தலிலும் எமது கட்சி போட்டியிடும். நாம் எவரது வாக்குகளையும் தம்டிப்பறிக்கவோப அல்லது எவரையும் விமா்சிக்கவோ விரும்பவில்லை. மாறாக நாம் எதனை எவ்வாறு மக்களுக்கு சேயைாற்ற உள்ளோம் என்பதனையே தெரிவிக்க விரும்புகின்றோம்.
2010 முதல் 2015இருந்த காலத்தில் கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்கு ஆற்றிய சேவையினை தமிழ் மக்கள் இன்றும் மறக்க வில்லைட பெற்றோா்கள் இன்றும் பாடாசலை அனுமதிக்காக என்னிடம்தான் வருகின்றாா்கள். எமது கட்சியின் முன்னைய மாகாண சபை உறுப்பிணா் தேசிய அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பிணா் எஸ் ராஜேந்திரன், பிரதித் தலைவரகா முன்னாள் மாகாணசபை உறுப்பிணா் கலாநிதி நல்லையா குமருபரன், போன்ற பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பிணா்கள் இணைந்து புதிய நிரவாகம் அமைக்கப்பட்டு கட்சி கட்டி எழுப்பப்படும். இளைஞாகளை நாங்கள் அரைகூவல் விடுக்கின்றோம். எங்களோடு இணைந்து செயலற்ற வாருங்கள் எனவும் முன்னாள் பிரதியமைச்சா் பிரபா கேணேஸ் அங்கு கருததுத் தெரிவித்தாா்.
0 comments :
Post a Comment