சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து சமூக வலைத்தளங்களில் (FaceBook) சில நபர்களை இலக்கு வைத்துபல்வேறு முறைகேடான மற்றும் போலியான தகவல்களை பதிவு செய்து விட்டு பாதிக்கப்பட்ட நபர்களைதொடர்பு கொண்டு நல்லவர்கள் போன்றும் அவர்களுக்கு உதவுவது போன்றும் பாசாங்கு செய்து மோசடிசெய்து வந்த கும்பல் சம்மாந்துறை பொலிஸாரிடம் சிக்கினர்.
சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள நபர்களை இலக்கு வைத்து பல்வேறு முறைகேடான மற்றும் போலியானதகவல்களை பதிவு செய்து விட்டு பாதிக்கப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு தொழிநுட்பத்தினைபயன்படுத்தி பதிவுகளை நீக்கித்தருவதாக கூறி பண மோசடி செய்து வந்த இரண்டு நபர்களை சம்மாந்துறைபொலிஸ் நிலைய சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.எச்.எம் ஹசீப் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறையை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என்று அறிய முடிகிறது. குறித்த சந்தேக நபர்களை இன்று (23) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment