"உம்மா... உம்மா..." சந்தோசத்தோடு பயாஸ் ஓடி வருகிறான்.
"உம்மா எங்க நிக்கியள்?"
"குசினிக்க வா மகேன் இன்னா நிக்கன்"
"என்ர ரிசல்ட் வந்துட்டுதும்மா.."
"ஆ..என்னவா வந்திரிக்கி மகன்
பாசாகிட்டியா..."
"ஓம்மா..நான் பாசாகிட்டன் எல்லா பாடத்துலயும் நான் நல்ல பாஸ் எடுத்திரிக்கன்"
"ஆ..எத்தின ஏ எடுத்திரிக்காய் மகன்?"
"எட்டு ஏ யும் ஒரு சி யும் எடுத்திரிக்கன் மா"
"ஆஆ..மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ்
என்ர புள்ள நல்லா பாஸ் பண்ணிருக்கான்."
என்று உடனே சுஜுதில் (இறைவனுக்கு நன்றி செலுத்துதல்) விழுந்தாள் பயாஸின் தாய் சபினா.
பயாஸும் பள்ளிக்குச் சென்று இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டே வீடு வந்தான்.
"நஸ்றின், சஹாமா எங்கம்மா..."
"பாடத்துக்கு போன மகன் இன்னம் வரல.
இனி வாற டைம்தான் வரட்டும் பொறு."
"ம்மா...ம்மா..." என்று சத்தம் போட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தார்கள் பயாஸின் தங்கைமார்கள்.
"நாநா ஒங்கட ரிசல்ட் வந்திட்டாமே என்ன நாநா"
"ஓ வந்திட்டு எயிற் ஏ சி "
"வாவ் மாஷாஅல்லாஹ்
கை தாங்க நாநா "
என்ற படி சந்தோசத்தில் தங்கை நஸ்றின் கைகுடுத்தாள்.
சஹாமா வீட்டின் முற்றத்திற்கு ஓடிப்போய் மலர் ஒன்றை பறித்து வந்து இந்தாங்க நாநா வாழ்த்துக்கள்" என வாழ்த்துக்களை கூறி குடும்பத்தோடு மகிழ்ந்தார்கள்.
சபினாவின் கணவரின் மரணத்திற்கு பிறகு பிள்ளைகளை மிகவும் கவனமாகவும் ஒழுக்கமாகவும் கல்வி விடயத்தில் அக்கறையாகவும் கவனித்து வருகின்றாள்.
சபினா தொலைபேசியை கையில் எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்
"சொந்தக்காராக்களுக்கு கோள் பண்ணி செல்லணுமே".
என்று தொலைபேசியை எடுத்து அவளது உடன் பிறந்த சகோதரிக்கு அழைப்பை விடுத்தாள்.
"ஹலோ தாத்தா ...ஆ...செல்லு சபினா..
என்ன மகன்ட ரிசல்ட் வந்திட்டு போல..
என்னவாம்,.பாத்ததா.."
ஓ தாத்தா..மாஷாஅல்லாஹ் நல்லா பாசாகி இருக்கான் பயாஸ் . எட்டு ஏயும் ஒரு சியும் எடுத்திருக்கான்.
சந்தோசமா இரிக்கி..அவர்ர ஆசையும் அதானே தாத்தா"
"ஆ..இப்ப சந்தோசம்தானே ...
நீ ஒவ்வொரு நாளும் படாத பாடு பட்டு
ஒடம்ப வரூத்தி தொழில் செஞ்சி பிள்ளையள
படிப்பிக்காய்..
அதுகள் இப்பிடி நல்லா படிச்சா சந்தோசம்தானே.
இனித்தான் இன்னம் கொஞ்சம் கவனமா பாக்கணும் நீ "
"ம்.. சரிதான் தாத்தா.
செரி நான் மறுகா பேசுறன்"
என்று தொலைபேசியை நிறுத்திக்கொண்டாள்.
தொலைபேசி அலறியது..
சபினாவின் கணவரின் தங்கையிடமிருந்து..
"அஸ்ஸலாமு அலைக்கும் மைனி
வஅலைக்குமுஸ்ஸலாம் என்ன மருமகன்ட ரிசல்ட்?"
"எட்டு ஏயும் ஒரு சியும் எடுத்திருக்கான் மைனி
ஆ..மாஷாஅல்லாஹ் எனக்கி தெரியும் என்ர மருமகன் செய்வான் என்டு"
"எங்க பயாஸ் மருமகன்?
அவருக்கு மாமி விஸ் பண்ணின என்டு செல்லுங்க மைனி"
"ஆ..கட்டாயம் செல்லுகன் மைனி."
"அப்ப நான் வைக்கவா."
"ஆ,.செரி மைனி."
இவ்வாறு அழைப்புகளுக்கு மேல் அழைப்பு வந்து கொண்டேயிருந்தன.
சபினா ஒருவரை மட்டும் மறக்கவில்லை.
அவளது உயிர் தோழி ஹினாயாவை.
ஹினாயாவும் சபினாவும் உயிர் தோழிகள்.
படிக்கும் காலத்தில் இருந்தே அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
சபினாவின் கணவர் மரணித்ததிலிருந்து
முழு ஆறுதலும் ஹினாயாதான்.
அது போலவே இன்று ஹினாயாவுக்கு அழைப்பை எடுத்தாள் சபினா "ஹலோ சபினா அஸ்ஸலாமு அலைக்கும்
வஅலைக்குமுஸ்ஸலாம் ஹினாயா..
ஒனக்குத்தான் முதல் எடுத்திரிக்கணும்.
அதுக்குள்ள நெறய கோள் வந்துட்டே இருந்திச்சி..."
"ஆ..பறவால்ல சபினா..உடு...
என்னவாம் மகன்ட ரிசல்ட்."
எட்டு ஏயும் ஒரு சியும் எடுத்திரிக்கான் ஹினாயா..என்று ஆனந்தக்கண்ணீர் வடித்தாள் சபினா.."
"என் கொழறுகாய்..
சந்தோசமான விசயம்..மாஷாஅல்லாஹ் நல்லா படிச்சிருக்கான் ஒன்ட மகன்.
நீ செய்ற தியாகங்களுக்கு அல்லாஹ் நல்ல பரிசா தந்திரிக்கான்.சந்தோசமா இரி."
கண்ணீரை துடைத்துவிட்டு.
"உண்மதான் ஹினாயா இது சந்தோசமான விசயம்தான்.இதையெல்லாம் பாக்க அவர் உசிரோட இல்லையே...." என்று மறுபடியும் அழுதாள்.
ஹினாயாவுக்கும் கவலையாகிவிட்டது.
"செரி...செரி...அதுக்கென்ன செய்ற உடு
அதெல்லாம் அவருக்கு இறைவன் நாடினது அவ்வளவுதான்.
நீ சந்தோசமா இரி.செரி நீ கொழறாத..
நான் வைக்கிறன் "
"ஆ,.செரி ஹினாயா.."
என்று சற்று மௌனம் காத்தாள்.
கணவனை நினைத்து அமைதியாக கண்ணீர் வடித்தாள்.
"உம்மா...நான் கொஞ்சம் வெளிய போய் வாறன்"
கண்களை துடைத்து விட்டு "ஏன் மகன் இரவாகிட்டே இந்த நேரத்துல எங்க போக போறாய்..."
"இல்லமா...கூட்டாளிமார் பீச்சில காத்துக்கு நிக்கானுகள்.ரிசல்ட் வந்தா பாட்டி வெக்கணும் என்டானுகள்.அதால எல்லாரும் சேந்து சும்மா வீச்சுல கொத்து வாங்கி தின்னப்போறம்"
"போற செரி மகன் கவனமா போய் நேரத்தோட வா"
"ஆ..செரிம்மா...வாறன்.."
ரிசல்ட் எதுவந்தாலும் கலைப்பிரிவில் தான் கற்பது என்று கலைப்பிரிவை தெரிவு செய்து வகுப்புகளுக்கும் போய்க்கொண்டிருந்தான் பயாஸ்.
பயாஸ் சாதாரண தரம் கற்ற பாடசாலையில் உயர்தரம் இல்லை என்பதனால் தேசிய பாடசாலை ஒன்றில் சேர்ந்தான்.
புதிய உறவுகள் நட்புகளாய் அதிகம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தான்.
உயர்தரம் முதலாம் ஆண்டு நன்றாய் பூர்த்தியானது.இரண்டாம் வருடத்தில் கால் வைத்தான் பயாஸ்.
நாட்கள் நகர்ந்தன..
வீடு தேடி நண்பர்கள் வரவு இருந்தன.
இரவு வேளையையும் விட்டு வைக்கவில்லை பயாஸின் நண்பர்கள் .
இதனை அவதானித்த சபினாவுக்கு கவலை
மேலெழ ஆரம்பித்தது.
"பயாஸ் என்ன இது..புதுப் பழக்கம்
இது செரி வரா..இஞ்ச பொம்புள பிள்ளையள் இரிக்கிற ஊடு...அல்லசெல்லாக்கள் என்ன பேசுவாங்க,..இது செரிவரா பயாஸ் மகன்."
என்று ஆதங்கமாய் கூறினாள் சபினா.
"ம்மா..என்றொரு சத்தம் போட்டான்.
மெதுவா கதைங்க..வெளியால அவனுக்கள் நிக்கானுகள்"
"என்னடா புதுசா சத்தமெல்லாம் போடுகாய்"
"மறுகா என்ன நீங்க
இப்ப என்ன நடந்த என்டு இப்பிடி பேசுகயள்"
"டேய் நீயே நல்லா யோசிச்சி பாரு நான் செல்லுகது பொழயா?"
"என்ர ஆண்டவனே...என்னடா இவ..
அவனுகள் என்ன உள்ளுக்கா வந்த
வெளியாலதான் நிக்கானுகள்"
"உள்ளுக்கு வந்திரப்போடா என்டுதான் செல்லுகள்."
பேசியவாறே தன் சேட்டை மாற்றிக்கொண்டு சென்றுவிட்டான்.
நாட்கள் நகர நகர தன் மகனின் நடவடிக்கை மாற்றமாகவே இருந்தது.
இதனை உணர்ந்து அவதானித்தாள் சபினா.
ஓர்நாள் இரவு எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது நடுநிசியில் 12.30 மணியளவில் மெதுவாக கதவு திறந்து மூடும் மெல்லிய சத்தம் கேட்க சபினா எழுந்து
வந்தாள்..மகனுடன் மூன்று நண்பர்களும் சேர்ந்து போவதை அவதானித்தாள்.
இதயத்தில் பட்டென ஒரு இடி...சபினா நொறுங்கிவிட்டாள்..
கனவா இது நிஜமா
என குழம்பிப்போனாள்.
"சுஜுதில் (இறைவனை இறைஞ்சுவதற்காய்)விழுந்தாள் சபினா "இறைவா என்ர ஊட்ல என்ன நடக்குது என்டே தெரியல...
நீதான் தெளிவு படுத்து.
என்ர மகன்ட வாழ்க்க நல்லா இரிக்கணும்.." என்று பயந்து நடுங்கிய குரலில் இறைவனை அஞ்சினாள் கெஞ்சினாள்.
அப்படியே காலையானது
பயாஸ் எப்போது வந்தான் என்று சபினாவுக்கு தெரியாது.
காலையில் வீட்டு வேலையும் அவளுக்கு ஓடவில்லை.
காலை 9 மணியாகியும் இன்னும் பயாஸ் எழும்பவில்லை.
"பயாஸ் பயாஸ்" என்று அருகில் சென்று எழுப்பினாள் சபினா
மெதுவாய் கண்ணைத்திறந்து "என்னம்மா,."
என்றான் "எழும்பன்டா இன்னம் படுக்காய் . இப்பல்லாம் வர வர நீ ஸ்கூலுக்கு போறதுமில்ல..பாடத்துக்கு போறாயுமில்ல.
என்னடா.."
"ஏன் நான் போறான் ஒனக்கு தெரியா"
"என்ன தம்பி மரியாதையும் கொறஞ்சிற்று போகுது.. நேத்து ஒன்ட சேர் ஊட்ட வந்தார் நீ பாடத்துக்கு மூணுநாளா வரலயாம் என்டார்.
பயாஸ்ர போக்கு செரியில்ல கொஞ்சம் கவனிங்க என்டார்"
அந்தாளுக்கு வேலல்ல அந்தாள் பொய் செல்லுகார்..விட்டாவிடியயும் ஒன்ட புராணத்த தூக்கிட்டியா..
நிம்மதியா படுக்கயும் உடமாட்டாய்..
இஞ்ச உடு
என்று கத்திக்கொண்டே எழுந்தான்.
"செரி செரி காசி கொஞ்சம் வேணும் தா" என்றவாறே குளியலறை பக்கம் சென்றான்.
"காசா என்னத்துக்கு அண்டக்கித்தானே ஆயன்ருவா தந்த நான்"
"கூட்டாளி பொடியனுக்கு காசு குடுக்கணும் அவனுக்கிட்ட வாங்கித்தான் பாடத்துக்கு காசி கட்டின"
எவ்வளவு வேணும்
நீ தாவன் நான் மிச்சத்த எடுத்துக்குவாறன்"
சபினாவுக்கு சந்தேகம் உறுதியாகிவிட்டது....
இதயம் படபடவென துடிக்க தொடங்கியது.

குளிக்கச் சென்ற பயாஸ் வெளியே வந்தான்
"இன்னா" என்று 300 ரூபாவை நீட்டினாள் சபினா.
"இதென்னத்துக்கு காணும் "என்று வாய்க்குள்ளே முணுமுணுத்தவாறு சென்று விட்டான்.
இவ்வாறே பாயாஸின் நடவடிக்கைகள் மெல்ல மெல்ல மாறியது..
தனிமையை அதிகமாக நாடுவதையும்
தூக்கம்,பசி,சந்தோசம் என்பவற்றை இழந்து
அதிக கோபமுடையவனாகவும் வீட்டில் அடிக்கடி தகராரு செய்பவனாகவும் மாறிவிட்டான்..
ஓரிரு மாதங்கள் கடந்தது..
"சபினா சபினா" என்ற குரலுடன் பக்கத்து வீட்டு பரிதா தாத்தா வந்தார்.
சபினா முன் விராந்தாவில் விழுந்து கிடந்ததை அறிந்த பரிதா தாத்தா ஓடி வந்து தண்ணீர் தெளித்து எழுப்ப,..ஓவென அழுதாள் சபினா.
"என்ன சபினா என்ன நடந்த ஒனக்கு
நல்ல காலம் நான் வந்ததால கண்டன்.
எழும்பு"
என்று எழுப்பி தலையணை கொடுத்து சாய வைத்தார் பரிதா தாத்தா.
அழுது அழுது முகம் வீங்கியிருந்ததை அவதானித்த பரிதா தாத்தா
"என்ன சபினா என்ன நடக்குது
ஒன்ட ஊட்ட ஒரே சத்தமாத்தான் இரிக்கி இப்பல்லாம்.
சாமானுகள் ஒடயிறதும் கத்துறதுமாத்தான் கேக்குது.அமைதியா இருந்த ஊடு எப்பிடி இப்பிடி போன" என்று பரிதா தாத்தா அக்கறை யோடு கேட்க..
"எல்லாம் இஞ்ச இரிக்கவன்தான் தாத்தா என்று தலையில் அடித்தாள் சபினா.
அவன் காட்டுற கூத்தும் அட்டகாசமும் தாங்க ஏலா தாத்தா
எப்பிடி இருந்தவன் இப்பிடி மாறிட்டானே" என்று ஓவென அழுதாள் சபினா.
கூட்டாளிமார் கொஞ்சப்பேர சேத்துக்கு
என்னமோ பாவிச்சி திரியிறான்.
என்று அழுதாள்.
பரிதா தாத்தாவுக்கு பாரிய அதிர்ச்சியாக இருந்தது.
"என்ன சபினா செல்லுகாய் ஒன்ட மகனா இப்பிடி
என்னால நம்பவே ஏலாதே
நேரத்துக்கு தொழுவான்
நேரத்துக்கு பள்ளி பாடம் என்டு போயிக்கித்தானே இருந்தான்.
கூட்டாளிமார் என்டதே அவனுக்கு இருந்ததில்லையே.
ஒன்ட ஊடு அவ்வளவு அமைதியா இருந்த ஊடாச்சே.
இப்பல்லாம் என்ன நடக்குது என்டு செரியான கொழப்பமா இரிக்கி."
என்று கவலையாக கூறினார் பரிதா தாத்தா.
செரி நீ கவலப்படாத எல்லாத்துக்கும் ஒரு முடிவு இரிக்கிம்.நான் கடைக்கி போக வந்த நான்தான் இஞ்சால வந்த நான் போய்வாறன்
என்று திரும்பினார் பரிதா தாத்தா.
பாடசாலை முடிந்து பிள்ளைகள் வரும் நேரமாகிவிட்டது.
சமைக்கவும் இல்லை சபினா.
உடனே எழுந்து முகத்தை கழுவிக்கொண்டு
அரிசை கழுவி அடுப்பில் வைத்தாள்.
கறி எதுவும் இல்லை என்று சம்பலும் செய்து முடிக்க நஸ்றினும் சஹாவும் வந்தார்கள்.
சாப்பாட்டை வைத்துக்கொடுத்தாள்.
பெண் பிள்ளைகள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது பயாஸ் வேகமாக வந்தவன்
"எனக்கி காசு கொஞ்சம் வேணும் என்ன தருவியா தரமாட்டயா" என்று அதட்டினான்.
"காசு தர ஏலா நீ செய்றத்த செய்ரா பாப்பம்"
என்று சபினாவும் தன் கோபத்தை உரத்த குரலில் சொல்லி முடிக்க திடீரென சத்தம்..
முன் விறாந்தாவில் கிடந்த கதிரையை தூக்கி ஒரே அடியில் உடைத்தான் "தரமாட்டயா தரமாட்டயா" என்று மூச்சு வாங்கி வாங்கி இரு கதிரைகளை உடைத்தான்.
"டேய்.."என்று கத்தி தலையில் கை வைத்து "காசி இல்லடா நம்புடா
ஏன்ரா நீ இப்பிடி மாறினாய்"
"காசி இல்லாட்டி இன்னா கெடக்க வளவ வித்துத்தா" என்றான் சத்தமாய்
வளவா எங்கடா கெடக்கு வளவு
இன்னா இன்னா கெடக்கன்ன இத வித்துத்தா"
"என்னது...வளவா..(வாயைப்பிளந்தாள் சபினா)
ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி இப்ப வளவுலயே கை வச்சிட்டானே...என்ர அல்லாஹ்வே"..என்று தலையில் அடித்து கத்தினாள் கதறினாள்..
பயாஸ் அப்படியே நண்பர்களைத் தேடி நகர்ந்தான்.
பயாஸை நினைத்து அழுது கொண்டிருந்த தாய்க்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்கள்
பயாஸின் தங்கைமார்கள்.
சற்று ஆறுதலடைந்த சபினாவுக்கு
தன் தோழி ஹினாயா நினைவில் வந்து நின்றாள்.அவளிடம் மனம் விட்டு பேசுவதற்காக ஹினாயாவின் வீட்டுக்கு செல்ல தயாரானாள்.நஸ்றினையும் சஹாமாவையும் தன் கூடவே அழைத்துக்கொண்டு ஹினாயாவின் வீடு நோக்கி நடந்தாள்.
ஹினாயாவின் வீடு பக்கத்து தெருவில் என்பதனால் நடந்தே சென்றார்கள்.
"ஹினாயா "
என்று ஹினாயாவின் வீட்டு கதவை தட்ட ஹினாயாவும் வந்தாள்.
"என்ன இன்டக்கி மூணுபேரும் இந்த நேரத்துல வரமாட்டயளே"..என்று சிரித்துக்கொண்டே
உள்ளுக்கு வாங்க என்று அழைத்தாள் ஹினாயா.
சபினா தன் பிள்ளைகளை ஹினாயாவின் பிள்ளைகளுடன் விளையாடச் செய்து விட்டு
ஹினாயாவுடன் பேச ஆரம்பித்தாள்.
"ஒன்னோட கொஞ்சம் பேசணும் ஹினாயா"
என்று முடிக்க "
நீ வந்த நேரமும் வந்த கோலமும் எனக்கி சந்தேகத்த தெளிவு படுத்திச்சி
செரி வாறன் பொறு"
என்று பூந்தோட்டத்தில் வேலை செய்ததை இடை நிறுத்திவிட்டு
தன் தோழி சபினாவுடன் பேச ஆரம்பித்தாள் ஹினாயா.
ஹினாயா வந்தமர்ந்ததும் சபினா தன் தோழியை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள்.
"என்ன சபினா கொழந்த புள்ள மாரி கொளறுகாய்...
கொழறாத..விசயத்த செல்லு..
மனசுல இரிக்க பாரத்த எறக்கி வெய்.
என்ன நடந்த கடசியா..."
"ஹினாயா,,.அவன் வளவ வித்து கேக்கான்..என்று ஓவென அழுதாள்...
ஒவ்வொரு சாமானா ஒடச்சான்..
காச களவெடுத்தான்...
எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டன்
இப்ப வளவ வித்துக்கேட்டா எப்புடி..நீயே செல்லு பாப்பம்.." என்று அழுதழுது பேசினாள்
"என்ன சபினா செல்லுகாய் வளவ வித்து கேக்கானா...
வளவுதான் ஒனக்கு ஏது...?
ஊட்டோட சேத்த முன் வாசல்தானே இரிக்கி"
ஹ்ஹும்..அதத்தான் அவள் வளவெண்டு வித்து கேக்கான்..என்னத்த செல்ல நான்..
எவ்வளவு பொறுப்போட நல்ல பிள்ளையா
நடந்தவன் பொறுப்பே இல்லாம
ஊட்டுல என்ன நடக்குது என்ட எண்ணமே இல்லாம அவன் நடந்துக்குற விதம்தான் வேதனையா இரிக்கி...என்று தேம்பி தேம்பி அழுதாள் சபினா.
ஹினாயாவின் கண்களும் நனையாமல் இல்லை.ஆறுதல் தேடிவந்த தன் தோழிக்கு ஆலோசனை ஒன்றை வழங்க ஆயத்தமானாள்.
"இத இப்பிடியே உட்டா செரிவரா.பயாஸ் திருந்திருவான் என்டுதான் நானும் இவ்வளவு நாளும் சீரியசா எடுக்காம உட்டுட்டு இருந்த.
அவன் வளவ வித்து கேக்க நெலமைக்கு வந்த்திட்டான் அத நாம வேற வழி செஞ்சி ஆள திச மாத்துவம்.
எங்கட அமைப்புல இப்பிடியான கேசுகளுக்கு கௌண்சலிங் குடுத்து திருந்தின பிள்ளையளும் இரிக்கி.
நான் செல்றத கேளு முதல் கொழறாத."
"செல்லு நான் கொழற மாட்டன்"
"நீ ஒரு நாளைக்கு எங்கட ஒப்பிசுக்க
ஒன்ட மகன கூட்டிக்கி வா"
"அவன் அப்படியெல்லாம் வரமாட்டானே"
"அவசர படாம நான் செல்லுகத்த கேளு"
"செரி செல்லு.."
"வளவு வித்து தாரன் உறுதியில சின்ன பிரச்சின இரிக்கி அதுக்கு நீயும் நானும் போய்த்தான் செரியாக்கி எடுக்கணும்.அப்பதான் வளவு விக்கலாம் என்டு ஏதாவது ஒரு பொய்ய செல்லி எப்பிடியாவது கூட்டிக்கி வரப்பாரு."
"ஆ..இப்பிடி சென்னா ஒருவேள வருவான்"
"ம்..அதான் நீ என்னன்டான செஞ்சி கூட்டிக்கி வா" என்றாள் ஹினாயா.
இப்பதான் ஹினாயா மனசு கொஞ்சம் லேசான மாரி இரிக்கி..நான் போய்வாறன்
இன்னரம் அவன் வந்துக்கு நின்டு என்னனென்ன கூத்தெடுக்கானோ தெரியா"
என்ற அச்சத்தோடு சொன்னாள் சபினா.
"அவன் இன்னரம் வந்திரிக்க மாட்டான் வந்த நீ பிள்ளைகளையும் கூட்டிக்கி வந்திருக்காய்
ஏதாவது குடிப்பம் இரி"
என்றாள் ஹினாயா
பிள்ளைகளையும் கூப்பிட்டு குடிக்க ரீ கொடுத்து அனுப்பினாள்.
மறுநாள்..மறுநாள்...என நகர்ந்தது..
நெஞ்சில் பட படப்பு
பதற்றம்..
பீதி...
எப்படி ஆரம்பிப்பது..
எப்படி அவனை கூட்டிக்கொண்டு போவது
என்ற குழப்பத்திலேயே சில நாட்கள் நகர்ந்தது.பயாஸின் நிலையும் மோசமாக மாறியே வருகிறது.
ஒருநாள் பகல் வேளை வீட்டுக்கு வந்த பயாஸிடம் "
சாப்பிட்டயா மகன்" என அன்பாய் அணுகி அக்கறையாக விசாரித்தாள் சபினா.
பயாஸுக்கு ஆச்சரியமாக இருந்தது.
வெறு வெறுப்பான முகத்தை மாற்றி "இன்னம் சாப்பிடல சோறு இரிக்கா" என்று கேட்க "ஓம் மகன் கைய கழுவிக்கி வா
சோறு தாறன்" என்று அன்பாய் பேசினாள் சபினா.
பயாஸுக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
இருந்தாலும் அவன் காட்டிக்கொள்ளவில்லை.
சாப்பிட அமர்ந்தான் பயாஸ் சாப்பாட்டை பரிமாறினாள் சபினா
"மகன்..."என பிதுங்கினாள்..
"மகன்..நீங்க வளவு வித்துக்கேட்டதானே..."
என்று மீண்டும் தயங்கி தயங்கி பேச ஆரம்பித்தாள்
"ஓ..என்ன..காசி வேணும் ஏலுமென்டா தா"
என்றான்..
"செரி செரி தாறன்..
நான் கொஞ்சம் ஒங்களோட பேசணும் மகன்
பேசினா கேப்பயளா..."
நிமிர்ந்து தன் கண்களால் சம்மதத்தை தெரிவித்தான் பயாஸ்.
"மகன் நீங்க முன்ன எப்பிடி இருந்தியள்
நேரத்து நேரம் தொழுறதும்..
படிக்கதும்,.
இரவையில நேரத்தோட ஊட்ட வந்துருவியள்
தங்கச்சிமாரோட பேசிக்கி இரிப்பியள்
எனக்கிட்ட ஒளிவு மறைவில்லாம பேசுவியள்
வாப்பா மௌத்தானதுக்கு பொறகு நீங்க இரிக்கியள் என்ட நம்பிக்கையிலதான் நான் வாழ்ந்து வாறன்.
சந்தோசமா போன நம்மட குடும்பம்
இப்ப சீர்கொலஞ்சி போச்சுதே மகன்
முன்ன இருந்த அமைதி நிம்மதி சந்தோசம் எதுவுமே இல்ல மகன்
சோறு ஆக்கவே மனமில்ல
ஆக்கினா சாப்பிட மனமில்லாம இரிக்கி
தங்கச்சிமாரும் கடுமையா யோசிக்காங்க
படிக்காங்கல்ல
பக்கத்து ஊட்டாக்கள் ஒரே வந்து வந்து புதினமா பாக்காங்க..
நானும் அடிக்கடி தலசுத்து வந்து மயங்கி மயங்கி உழுகன்
முன்னல்லாம் காச்சல் வந்தாலே பக்கத்துலயே இருந்து என்ன கவனிப்பியள்.
இப்ப என்ன என்டும் கேக்கயள் இல்ல.
இப்ப எனக்கி ப்றசர் ,சீனி கூடிட்டாம் என்டு டொக்டர் செல்லுகார்.
ஒங்கட ந்த நடவடிக்க எங்கள கடுமையா பாதிக்குது மகன்.
ஏன் மகன் என்ன நடந்த ஒங்களுக்கு.
கெட்ட கூட்டாளிமாராலதான் நீங்க இப்பிடி ஆகிருக்கியள் என்டு விளங்குது.
இருந்தாலும் நமக்கு தங்கச்சிமார் இரிக்காங்க தங்கச்சிமார படிப்பிக்கணும்
நீங்களும் படிச்சி நல்ல நெலமைக்கு வரணும் என்டுதானே இந்த அடுப்படிய கெடந்து இடியப்பம் சுட்டு நெருப்புல வேகுறன்.
தங்கச்சிமார்ர நகையளயும் நீங்க ..."என்று வார்த்தையை முடிக்காமலே அழுதாள் .
இந்த வார்த்தைகளை கேட்டதும் கொஞ்சம் நிமிர்ந்து தாயை பரிதாபமாய் பார்த்தான் பயாஸ்.
இதெல்லாம் ஒங்கட வாப்பா இரிக்ககுள்ள தேடின சொத்துகள்.
இப்ப ஊட்டுல ஒன்டுமே இல்ல..
நீங்களே நல்லா பாருங்க மகன்..
என்று கதறி கதறி அழுதாள்..
பயாஸுக்கு சாப்பிட்டும் முடிந்தது.
கை கழுவி முடியவில்லை
சபினா மயங்கி விழுந்தாள்..
பார்த்துக்கொண்டு நின்ற தங்கைகள் ஓடிவந்து
உம்மா என ஓலமிட
பயாஸ் கைகழுவிக்கொண்டு நின்றவன்
ஓடோடிவந்து தாயை தூக்கினான்.
ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றான்.
அவசர அவசரமாய் சிகிச்சை நடந்துகொண்டிருக்கின்றன.
பயாஸ் வெளியே பதட்டத்துடன் நின்றிருந்தான்.
ஹினாயா அன்ரிக்கு தோலைபேசியழைப்பை எடுத்தாள் நஸ்றின்.
"ஹலோ அன்ரி நான் நஸ்ரின் பேசுறேன்
உம்மாக்கு...உம்மாக்கு..."என்ன மகள்..என்ன உம்மாக்கு என்ன??"உம்மா மயங்கி உழுந்திற்றா..அன்ரி..
ஆஸ்பத்திரிக்கி கூட்டிக்கி போறா நாநா."
அல்லாஹ்வே...ஆ..செரி நீங்க போண வெய்ங்க நான் வாறன்"
என்று சாபினாவின் தோழி ஹினாயா
ஆஸ்பத்திரிக்கு சென்றாள் ஹினாயா அங்கே பயாஸ் சோகமாய் அமர்ந்திருப்பதை அவதானித்தாள் ஹினாயா
பயாஸின் அருகே சென்ற ஹினாயா" என்ன நடந்த பயாஸ் உம்மாக்கு என்று பதட்டத்துடன் கேட்க " அவ என்னோட சும்மாதான் பேசிக்கி இருந்தா...
அப்பிடியே கொழறினமாரி நெஞ்ச பொத்திக்கி மயங்கி உழுந்திற்றா..
என்றான் பயாஸ்
"அல்லாஹ்வே...அவளுக்கு யோசின கனக்க
பாவம் அவள்..
ஒங்கள யோசிச்சி யோசிச்சி நோயாளியாப்போனாள்.
ஒரே எனக்கி கோள் எடுத்து ஒப்பாரிதான் ...
நீங்க ஏன் மகன் இப்பிடி நடந்துக்குறியள்..
ஒங்களுக்கு என்ன கொற வச்ச ம்மா..
எவ்வளவு அழகான குடும்பத்தில் பொறந்த நீங்க அன்பான உம்மா தங்கச்சிமார் என்டு
படிப்பு பள்ளி என்டு நல்லாத்தானே இருந்தியள்
நல்ல ரிசல்ட் கூட எடுத்தியள். வாற வருசம் ஏ எல் எழுதணும் .சபினா
ஒங்களப்பத்தி பெரிய கனவே கண்டு வெச்சிருக்காள்.
நீங்க கெட்ட கூட்டாளிமாரோட சவகாசத்த வெச்சிக்கி ஒங்கட நல்ல பழக்கவழக்கங்கள
மாத்திக்கிட்டியள்...
கொஞ்சம் யோசிங்க மகன்.
வாப்பாவும் இல்லாத எடத்துல உள்ளதும் ஒன்டு மகன் என்டு அவ்வளவு பாசமா இருந்த தாய நீங்க நோகடிக்கியள்.
தாய் மனசு நொந்த என்ன நெலம...
என்று ஹினாயாவும் ஆதங்கமாய் அன்பாய் பேசினாள்.
பயாஸ் இன்னும் ஒரு படி மேலாக மனதை ஒருநிலைபடுத்தினான்.
தாயின் இந்த நிலையும் அவன் நடந்துகொள்ளும் முறையையும் தங்கைமார்களையும் தன் வீட்டையும் மாறி மாறி சிந்தித்தவனாகவே இருந்தான்..
"சபினாவோட வந்தவங்க யாரு"
என்ற குரலுக்கு நான்தான் டொக்டர் என்று பதறிக்கொண்டு ஓடினான்.
"நீ யாரு சபினாக்கு "
"நான் மகன்..என்று கண்கலங்கிவிட்டான்
கண்ணீர் தாரை தாரையாக சத்தமின்றி வழிந்தோட..."ஒங்க உம்மா கண் முழிச்சிட்டா..
பட்(but,) இப்ப பாக்க வேணா..
அவ எமோசனல் ஆனா பிரச்சின..சோ..நீங்க கொஞ்ச நேரம் கழிச்சு போய் பாக்கலாம்.
"தேங்ஸ் டொக்டர்"
ஹினாயா பயாஸை அவதானித்தவளாய் நின்றாள்.இருந்தபோதிலும் தன் தோழி சபினா பற்றிய கவலை மேலெழத்தான் செய்தது.சபினாவை பார்த்துவிட்டு போகலாம் என்று சற்று காத்திருந்தாள் ஹினாயா.
"சபினா பாக்க வந்தாக்கள் இப்ப பாக்கலாம்" என்ற தாதியரின் குரல் கேட்க ஓடோடி போனான் பயாஸ்..
தன் தாயின் அருகே சென்றவன் அமைதியான கண்ணீருடன் தாயின் வலது கரத்தை எடுத்து தன் கண்களில் வைத்து அழுதுகொண்டிருந்தான். "ம்மா,.என்ன மன்னிச்சிருங்கம்மா...ப்லீஸ் ம்மா,.
நான் இனி ஒங்கள கஸ்டப்படுத்தமாட்டன் ம்மா.."
என்று ஓவென அழுதான் .
மெய்சிலிர்க்க வைத்தது ஹினாயாவை
பயாஸா இது என்று அவள் திகைத்தாள்.
"மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்" என்று ஹினாயாவின் நாவுகள் இறைவசனம்
உரைத்தது.
"வீட்டுக்கு வந்தாள் சபினா..
பழைய படி அமைதியான சூழலும் சந்தோசமாகவும் மாறியது வீடு.
இரண்டு நாள் வைத்தியசாலையில் கழிந்தது நாட்கள்
மூன்றாவது நாள் பயாஸின் நன்பர்கள் தேடி வீடுவரை வந்தார்கள்
"என்னடா ஆளையே காணல
என்ன திருந்திட்டியா
சாமான் கொண்டு வந்திரிக்கன்..
வாவன் போவம் அவனுகள் காத்துக்கு நிக்கானுகள்.
நீ இல்லாம அவனுகளும் வாறானுகளில்ல"
"டேய் உம்மாக்கு சொகமில்லடா..போங்க வாறன்" என்று ரகசியமான குரலில் சொன்னான்.
"செரி சொணங்காம வா" என்று நண்பர்கள் சென்றுவிட்டார்கள்.
நண்பர்கள் வந்தது அழைத்தது எல்லாவற்றையும் அவதானித்திருந்தாள் சபினா.
உம்மா தூங்கியதும் மெல்ல கதவை திறந்துகொண்டு வெளியே சென்றான் பயாஸ்.
சபினா அவதானித்துவிட்டாள்.
ஹினாயாவுக்கு உடனே அழைப்பை எடுத்தாள்.
"ஹலோ ஹினாயா அவன் இன்னம் திருந்தல..
நான் மௌத்தானாலும் அவன் இப்பிடித்தான் இரிப்பான்" என்று ஆவேசமாய் கூறினாள் சபினா.
"போதைக்கு அடிமையானவனுகள் ஒடனே திருந்துவானகள் என்டு ஒனக்கு ஆரு சென்ன
படிப்படியாத்தான் மாத்தணும்
பொறு நான் பாத்துக்குறன்" என்று போணை நிறுத்திவிட்டு..
சற்று சிந்திக்க ஆரம்பித்தாள் ஹினாயா.
ஹினாயா ஒரு அரச சார்பற்ற முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி எனும் நிறுவனமொன்றில் அதிகாரியாக கடமை புரிபவள் என்பதனால் உளவளத்துணையிலும் தேற்சி பெற்றவள் என்பதனாலும்
பயாஸை திசை திருப்புவதற்காக ஒரு முடிவுக்கு வந்தாள்.
பயாஸுக்கு அழைப்பை எடுத்தாள்.
வீட்டுக்கு வரும்படி அன்புக்கட்டளையும் விதித்தாள்.
"என்ர அன்ரி கோள் பண்ணின.."
வாங்க மகன் இரிங்க கொஞ்சம் பேசணும் என்டுதான் வரச் சென்ன
அமைதியை பதிலாய் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தான்.
"மகன்..பயாஸ் அன்ரி ஒரு விசயம் சென்னா
கேப்பயளா..?"
"செல்லுங்க அன்ரி
நீங்க வெளிநாடு போனா நல்லம்தானே மகன்
வெளிநாடு போற எண்ணம் ஏதாவது இரிக்கா ஒங்களுக்கு..?"
"ஓம் அன்ரி கூட்டாளிப்பொடியனும் ஒருத்தன் ஓமானுக்கு போப்போறானாம்
என்னையும் பாஸ்போட் போடச் செல்றான்
அதான் யோசிக்கன்"
"ச்சீ..ச்சீ..கூட்டாளி மாரோட போற வேலயெல்லாம் வேணா
கூட்டாளிமாராலதான் நீங்க இந்த நெலமைக்கி வந்திருக்கியள்
நீங்க வேறயா போங்க
எங்கட நாநா ஒருத்தர் சவூதியில நிக்கார்
அவர் வீசா அனுப்பி ஆக்கள் எடுக்கார்
அவருக்கிட்ட ஒங்கள நான்செல்லி வச்சா அவர் எடுப்பார்.
தங்கச்சி மார் இரிக்காங்க குடும்பம் கஸ்டப்படுது
நீங்களும் படிக்க காலத்துல கெட்ட கூட்டாளிமாரால படிப்ப நாசமாக்கிப்போட்டயள். இஞ்ச இருந்தா அவனுகள் ஒங்கள வழி கெடுத்துக்கிட்டே இருப்பானுகள் மகன்"
என்று முதுகை தடவி அன்பாய் பேசினாள் ஹினாயா.
புத்துயிர் பெற்றவனாய் கண்களை யாரோ திறந்துவிட்டவனாய் "அன்ரி என்று அழுதான்..
நீங்க செல்லுகது செரிதான் அன்ரி நான் போறன் வெளிநாட்டுக்கு "
என்று தன் உண்மையான உறுதியான முடிவை சொன்னான்
நாட்கள் நகர்ந்தன...
வெளிநாடு சென்றான் பயாஸ்
குடும்ப பொறுப்பு உணர்ந்தவனாய் மாறினான்..
வேலைக்கு போகின்றான்..
வீட்டுக்கு அழைப்பை ஏற்படுத்தி
அக்கறையாய் அன்பாய் தன் தவறை உணர்ந்தவனாய் அடிக்கடி தன் தாயிடம் தங்கைமாரிடம் பேசுகிறான்...
ஹினாயா அன்ரியையும் விசாரிக்க மறக்கமாட்டான்..
இப்படியே நாட்கள் மாதங்கள் என உருண்டோடின
சபினாவின் கவலைகள் கஸ்டங்கள் படிப்படியாய் கரைந்தோடின...

0 comments :
Post a Comment